Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் நுழைந்த சனி, சில நாட்களிலேயே கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதுவும் 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி, கும்ப ராசியில் 33 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார்.
வேத ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரும் கிரகம் தான் சனி. இந்த சனி ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும் என்பதால் மற்ற கிரக பெயர்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் சனிப்பெயர்ச்சியின் தாக்கமானது ஒருவரது வாழ்வில் நீண்ட காலம் இருக்கும். இந்த சனி, மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.

சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு சென்றார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் நுழைந்த சனி, சில நாட்களிலேயே கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதுவும் 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி, கும்ப ராசியில் 33 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். பின் மார்ச் 5 ஆம் தேதி சனி உதயமாவார். அஸ்தமனமாகும் காலத்தில் சனி அதன் வலிமையை இழந்து இருக்கும். இதன் விளைவாக சனி வழங்கும் நற்பலன்களில் தடை ஏற்படும். இருப்பினும், சனி அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது கும்ப ராசியில் அஸ்தமனமாகும் சனியால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இது வருமானம், நிதி ஆதாயம் மற்றும் ஆசைகளின் வீடாகும். எனவே இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தள்ளிப் போகலாம். சில நிதி பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாரையும் நம்பாதீர்கள். சற்று விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நம்பிக்கையின்மை மற்றும் ஊக்கமின்மையை உணர்வீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல. பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சில ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் அலட்சியம் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். திடீர் பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். இக்காலமானது உங்களின் கடின உழைப்பிற்கு ஒரு சோதனை காலமாகும். எனவே முயற்சி மற்றும் கடின உழைப்பை கைவிடாதீர்கள். இக்காலத்தில் எந்த பிரச்சனைகளையும் நீங்கள் திறம்பட சமாளிப்பீர்கள்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் திருமண வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மூன்றாம் நபரால் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் மூன்றாம் நபரை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட விடாதீர்கள். வியாபாரிகள் இக்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் உங்கள் நடத்தையை கவனிக்க வேண்டும். ஏனெனில் உஙகளின் ஆதிக்கம் செலுத்தும் குணம் மற்றும் ஆக்ரோஷ குணம், திருமண வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் எதிரிகளால் இக்காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. இருப்பினும், சற்று விழிப்போடு இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இது எதிரிகள், உடல்நலம், போட்டி, தாய்வழி மாமன் ஆகியவற்றின் வீடாகும். இதனால் ஏதேனும் போட்டித் தேர்வில் பங்கேற்றிருந்தால், உங்கள் முடிவுகள் தாமதமாகலாம். மாணவர்கள் இக்காலத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களின் தாய் வீட்டில் நெருங்கியவர்கள் நோயால் பாதிக்கப்படலாம். வியாபாரிகள் தங்கள் செயல்திறனில் சரிவை காண நேரிடும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இது கல்வி, காதல், உறவுகள், குழந்தைகள் ஆகியவற்றின் வீடாகும். இக்காலத்தில் பங்கு சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு கடினமான காலமாக இருக்கும். குழந்தைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இக்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இது தாய், குடும்ப வாழ்க்கை, வீடு, வாகனம் மற்றும் சொத்து ஆகியவற்றின் வீடாகும். நீங்கள் ஒரு புதிய வீடு, வாகனம் அல்லது வேறு ஏதேனும் சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், அதை சற்று நிறுத்தி வைக்க வேண்டும். சொத்து தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. முதலீட்டாளர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் காரணமாக வீட்டின் சூழல் பாதிக்கப்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலம் சற்று கடினமாக இருக்கும். பொதுவாக நீங்கள் நன்கு தொடர்பு கொள்வீர்கள். ஆனால் சனி அஸ்தமனத்தால், நன்கு தொடர்பு கொள்ள முடியாது. தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவைக் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் அவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இது குடும்பம், சேமிப்பு, பேச்சு ஆகியவற்றின் வீடாகும். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இக்காலகட்டத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் உங்களின் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஜோதிடம் கற்க நினைத்தால், அதற்கு இக்காலம் நல்ல காலம்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் திடீர் நோய்களால் பாதிக்கப்படலாம் என்பதால் நன்கு ஓய்வு எடுத்து, ஆரோக்கியமான உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் ஈகோ அதிகரிக்கக்கூடும். அன்பானவருடன் மோதல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை ஏற்படலாம்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகிறார். இதனால் நிதி ரீதியாக, உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் உங்கள் பணத்தைச் சேமிக்கும் நோக்கத்தை இழக்க நேரிடலாம். எதையும் செலவழிக்கும் முன் கவனமாக சிந்திப்பது நல்லது. கடன் வாங்க நினைப்பவர்கள் இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தியானம் மற்றும் யோகா போன்றவற்றை தினமும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











