Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
மகரத்தில் சனி சுக்கிர சேர்க்கையால் ஜனவரி 17 வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்...
ஜோதிடத்தில் சனிக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இவ்விரு ராசிகளின் சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறுவார்கள்.
Saturn And Venus Conjunction in Capricorn: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழும். இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கலாம். அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்றார். அதற்கு முன்னரே சனி மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் சனி சுக்கிர சேர்க்கை ஏற்பட்டுள்ளது.

ஜோதிடத்தில் சனிக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இவ்விரு ராசிகளின் சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறுவார்கள். இப்போது மகரத்தில் ஏற்பட்டுள்ள சனி சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை உருவாகியுள்ளது. இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலத்தில் வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் தேடி வரும். அதே வேளையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு வலுபெறும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

துலாம்
சனி சுக்கிர சேர்க்கையானது துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து சுகங்களும் கிடைக்கும். மேலும் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இந்த கிரக சேர்க்கைகளின் பார்வையானது 10 ஆவது வீட்டில் விழுகிறது. எனவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, சுக்கிர சேர்க்கை உருவாகியுள்ளது. இதனால் வணிகம் மற்றும் தொழிலில் நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல ஆர்டர்களால் பெரிய லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
