Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
2022 சனிப் பெயர்ச்சிக்குப் பின் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கப் போகுது...
பொதுவாக சனியின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இத்தகைய சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி. இவர் ஏற்கனவே தனது சொந்த ராசியான மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த கும்ப ராசிக்கு சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் வருகிறார்.

வேத ஜோதிடத்தின் படி, சனி கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறது. அதாவது ஒருவர் நல்லதை செய்தால் அவர்களுக்கு சாதகமான பலன்களைம், கெட்டதை செய்தால் அவர்களுக்கு மோசமான பலன்களையும் சனி பகவான் தருவார். பொதுவாக சனியின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
2022 சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதாகவே இருக்கும். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்கள் திறனை வெளிக்காட்டுவதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் இமேஜ் நன்றாக இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகள் உங்களுக்கு அனைத்து நேரத்திலும் ஆதரவாக இருப்பார். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு, நல்ல வெற்றி கிடைக்கும். பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! வரும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் வேலையைப் புறக்கணிப்பது உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் இக்காலத்தில் முடிக்கப்படும். முதலீட்டு திட்டங்களும் வெற்றிகரமாக இருக்கும். இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! கும்பம் செல்லும் சனி பகவானால் உங்களுக்கு நல்லது நடக்கப் போகிறது. உங்களின் கடின உழைப்பிற்கு முழு பலனும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் உதவியால், சட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டைப் பெறும். கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு, இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகளால் நற்பலன்களைப் பெறுவீர்கள். அரசு வேலை தேடுபவர்களுக்கு இப்பெயர்ச்சிக்கு பின் நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்
2022 சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் திடீர் பண ஆதாயங்களுக்கான வலுவான வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் முழு மனதுடன், ஆர்வத்துடன் வேலை செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். உங்களின் வலிமை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில நல்ல வரன் வரக்கூடும். மாணவர்களுக்கு இது சாதகமான காலம். உத்தியோகத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வணிகம் செழிக்கும் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொண்ட சில முயற்சிகளின் பலன் இக்காலத்தில் தெரியும். அதிக பணத்தை சேர்க்கும் வாய்ப்புகள் அமையும்.



Click it and Unblock the Notifications
