For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் தொல்லைகள் நீங்க... கொடுத்த கடன் வசூலாக இந்த பரிகாரங்களை பண்ணுங்க..

|

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல இன்றைக்கு பிரச்சினைகள் இல்லாத வீடே இல்லை. கடன் பிரச்சினை, தீராத நோய்கள், கண் திருஷ்டியால் மன அமைதி பாதிப்பு, கொடுத்த பணம் திரும்ப வராமல் போவது என பல்வேறு பிரச்சினைகளால் அவதிக்கு ஆளாகின்றனர். நமது வீட்டிலேயே காலை அல்லது மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபட மன அமைதி ஏற்படும். விளக்கேற்றுவது அற்புதமான மருந்து. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும். சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

Astrological Remedies For Success And Growth

சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட கடன் பிரச்சினை தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடன் தொல்லை நீங்கும்

கடன் தொல்லை நீங்கும்

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது தரிசனம் செய்து விளக்கேற்ற வழிபடலாம். இது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும். கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிமுதல் 12 மணிக்குள் இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் இடையே பிரச்சினை நீங்கி ஒற்றுமையாக வாழ்வார்கள்.

சனி பாதிப்பு குறைய

சனி பாதிப்பு குறைய

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றவும்.

காலபைரவர் பூஜை

காலபைரவர் பூஜை

சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

நெய் தீபம்

நெய் தீபம்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும். காரணம் பங்குனி உத்திர நாளில்தான் தெய்வீக திருமணங்கள் நடந்துள்ளன. ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

துர்க்கைக்கு விளக்கு

துர்க்கைக்கு விளக்கு

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி அரை மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல 6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.

முருகனுக்கு பரிகாரம்

முருகனுக்கு பரிகாரம்

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும். விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும். ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

புத்திரபாக்கியம்

புத்திரபாக்கியம்

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர குழந்தை பாக்கியம்

ஏற்படும் வாய்ப்பு உண்டு.

கருடாழ்வார் வழிபாடு

கருடாழ்வார் வழிபாடு

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும். வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை. இந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். தொழில் தடை, கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்கவும் வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற்று என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrological Remedies For Success And Growth

These simple remedies will give you success, growth and prosperity.Actually remedies passed from generation to generation and can actually help you.To remove chronic problems in life, light a diya in front of Lord Ganesha everyday this apart pray to the trunk of Lord Ganesha everyday and your problems will vanish.
Story first published: Monday, October 21, 2019, 12:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more