பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க இந்த பரிகாரம் பண்ணுங்க..

இதோ பொதுத்தேர்வு வரப்போகிறது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட்டார்கள். மன அழுத்தம் சிறு வயது முதலே ஆரம்பமாகிவிட்டது.

ஆரம்ப கல்வியில் இருந்தே மன அழுத்தம் ஆரம்பமாகிவிட்டது. ஐந்து, எட்டு, பத்து, பனிரெண்டு என பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் சிறு வயது முதலே ஆரம்பமாகிவிட்டது. பெற்றோர்களும் ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கின்றனர். பத்து, +2 மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வு அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பதால் அதிக மதிப்பெண் பெற சில பரிகாரங்களை செய்ய வேண்டும். எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிக மார்க் வாங்கலாம் என்று பார்க்கலாம்.

Remedies For Educational And Exam Success For Students

ஜாதகத்தில் 4ஆம் இடம் என்பது பள்ளிப் படிப்பையும், 9ஆம் இடம் என்பது உயர் கல்வியையும் குறிக்கும் ஸ்தானங்கள் ஆகும். புதன் வித்யாகாரகன் ஆவார். குரு பகவான் மூளைக்கும் பேரறிவுக்கும் காரகன் ஆவார். சுக ஸ்தானம் எனப்படும் நான்காம் இடமும், நான்காம் வீட்டோனும், புதனும், குருவும் வலுப்பெற்ற ஜாதகர்களுக்குப் பள்ளிப்படிப்பு சிறப்பாக அமையும். எல்லாப் பாடங்களிலும் 60 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று, பள்ளியிலும், மாவட்ட அளவிலும் அல்லது மாநில அளவிலும் முதலிடம் பெற வாய்ப்பு உண்டு.

பொதுவாக லக்னம், 4, 9 ஆகிய இடங்கள் வலுப்பெற்று புதனுக்கும் குருவுக்கும் அதிக பலம் இருப்பவர்களுக்கே பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் நன்கு அமையும். 2ஆம் இடம் தன ஸ்தானமும், வாக்கு ஸ்தானமும் ஆகும். 5ஆம் இடம் என்பது பூர்வ புண்ணியம், புத்தி, யூக சக்தி ஆகியவற்றைக் குறிப்பிடும். 10ஆம் இடம் தொழில் ஸ்தானமாகும். 11ஆமிடம் ஆதாய ஸ்தானமாகும். அதாவது லக்னம், 2, 4, 5, 10, 11ஆம் இடங்களில் எந்த இடம், எந்தக் கிரகம் அதிக பலம் பெற்றிருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கான படிப்பைத் தேர்வு செய்வதன் மூலம் கல்வியில் ஜொலிக்க முடியும். ராசிக்கு 4,6,11 இடத்திற்கு உரிய தெய்வங்களை வணங்க நன்மைகள் நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 4ஆம் இடம் கடகம், ஆறாம் இடம் கன்னி, 11ஆம் இடம் கும்பம். எனவே இந்த ராசிகளுக்கு உரிய அதிபதிகள் சந்திரன், புதன், சனி. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், வெங்கடாசலபதியை வணங்க படிப்பு சரளமாக வரும் நல்ல மதிப்பெண் வாங்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிகளுக்கு உடைய கிரகங்களின் தெய்வங்களான சூரியன், சுக்கிரன், குரு பகவானை வணங்கலாம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர், பிரம்மாவை வணங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

புத பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு கன்னி, விருச்சிகம், மேஷம் ஆகிய ராசிக்களுக்கு உரிய கிரகங்கள் புதன், செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் வீரபத்திரரை செவ்வாய் கிழமைகளில் வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு துலாம், தனுசு, ரிஷபம் ராசிகளுக்கு உரிய கிரகங்கள் சுக்கிரன், குரு ராசி அதிபதிகள். இந்த ராசிக்காரர்கள் காமாட்சி அம்மன், சரஸ்வதி தேவியை வணங்க கல்வி வளம் பெருகும். நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு விருச்சிகம், மகரம், மிதுனம் ராசிகளின் அதிபதி கிரகங்கள் சனி,செவ்வாய், புதன். இந்த ராசிக்காரர்கள் விநாயகர், சாஸ்தா, ஐயப்பனை வணங்க நன்றாக படிக்கலாம். நினைவாற்றல் அதிகமாகும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் சிறந்த அறிவாளிகள். புதன், சூரியன் சரியில்லாத இடத்தில் அமர்ந்தால் நினைவாற்றல் குறையும். இந்த ராசிக்காரர்கள் நன்றாக படித்து நினைவாற்றலுடன் தேர்வு எழுத மகாகாளி, சித்தர் பீடங்கள், ராகவேந்திரரை வணங்கினால் நினைவாற்றல் அதிகமாகும்

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள். மகரம், மீனம்,சிம்மம் ஆகிய ராசிகளின் அதிபதிகள் சூரியன், சனி, குரு படிப்பிற்கு உதவி செய்யும் கிரகங்கள் ஆவார்கள். இந்த ராசிக்காரர்கள். சித்தர்கள் ஜீவ சமாதிக்கு போகலாம். சாய்பாபா, ஸ்ரீ ராமரை வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கும்பம், மேஷம், கன்னி ராசிகளின் அதிபதிகளான சனி, செவ்வாய், புதன் நன்மை செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற முருகன், சக்கரத்தாழ்வாரை வணங்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு குரு, சுக்கிரன்,நன்மை செய்வார்கள். படித்தது எல்லாமே மறந்து போகிறதே என்று கலங்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி, பத்மாவதி தாயாரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கலாம்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு மேஷம்,மிதுனம்,விருச்சிகம் ராசிகளின் அதிபதிகள் செவ்வாய், புதன் கிரகங்கள் நன்மை செய்யும். மகரம் ராசிக்காரர்கள் படித்தது எல்லாம் மறந்து போவதாக ஃபீல் பண்றீங்களா? கலை வேண்டாம். நீங்க பழனி முருகனையும் ஐயனாரையும் வணங்கலாம்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு ரிஷபம், கடகம், தனுசு ராசிகளின் அதிபதிகள் சுக்கிரன், சந்திரன், குரு. இந்த ராசிக்காரர்கள் மாலை நேரத்தில் விளக்கேற்றி ஸ்ரீ தட்சிணா மூர்த்தியையும், சாஸ்தா, திருச்செந்தூர் சண்முகரை வணங்கலாம். புத்தி கூர்மை அதிகமாகும். நினைவாற்றல் அதிகமாகி தேர்வுகளை நன்றாக எழுதலாம்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. உங்க ராசிக்கு 4 ஆம் வீடு மிதுனம் ஆறாம் வீடு சிம்மம், 11ஆம் வீடு மகரம். இந்த ராசிகளின் அதிபதிகள் புதன், சூரியன், சனி. இந்த ராசிக்காரர்கள் நினைவாற்றல் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க அருள்மிகு துர்க்கை அம்மன், பிரம்மாவை வணங்கலாம். படிக்கும் அறையில் இந்த படங்களை வைத்துக்கொண்டு படிக்கலாம். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, February 3, 2020, 10:27 [IST]
Desktop Bottom Promotion