#RealHai: ஜோஷின் புதிய சவாலில் பங்கு கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்..!

ஜோஷ் நீங்கள் நீங்களாகவே இருந்து ஒவ்வொரு சிறிய தருணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் #RealHai என்னும் தலைப்பில் ஒரு போட்டியை நடத்துகிறது.

டெய்லிஹண்ட்டின் மிகவும் பிரபலமான ஓர் ஆப் தான் ஜோஷ். இந்த ஜோஷ் ஆப் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட அற்புதமான ஆப். இந்த ஆப்பில் உள்ள பல்வேறு அம்சங்கள் பயனாளிகள் எளிதில் கையாளும் வகையில் உள்ளன. இந்த ஆப்பின் மூலமாக பயனாளிகள் தங்களின் தனித்திறமையை வீடியோவாக எடுத்து பதிவிட முடியும்.

இந்த ஜோஷ் ஆப்பில் பயனாளிகள் நடனம், இசை, நகைச்சுவை, பாடல், சமையல் என எதை வேண்டுமானாலும் வீடியோவாக எடுத்து வெளியிடலாம். முக்கியமாக இந்த ஆப் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் உள்ளது. இந்த ஆப்பை ப்ளேஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

RealHai: Sidharth Malhotra And Hansika Motwani Encourage People To Celebrate Their Unfiltered Version

இப்படிப்பட்ட ஜோஷ் ஆப் இதுவரை பல்வேறு பிரச்சாரம்/போட்டிகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஜோஷ் நீங்கள் நீங்களாகவே இருந்து ஒவ்வொரு சிறிய தருணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் #RealHai என்னும் தலைப்பில் ஒரு போட்டியை நடத்துகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் திறமையை கூச்சமின்றி ரியலாக வீடியோ எடுத்து வெளியிட வேண்டும்.

இதை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக ஜோஷ் ஆப் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சித்தார்த் மல்ஹொத்ரா மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடனமாடும் ஒரு அறிமுக பாடலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் நாட்டின் வடக்கு பகுதியையும், ஹன்சிகா தெற்கு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்த பாடல் நீங்கள் எதையும் செய்ய முடிந்தால் உண்மையாக இருங்கள் என்பதை வலியுறுத்துகிறது. இந்த அற்புதமான பாடலுக்கு சஜித் இசையமைத்துள்ளார்.

இந்த போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்கு, ஒவ்வொரு வாரமும் 6 டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இதில் நன்கு சிந்தித்து தனித்துவமான வீடியோக்களை உருவாக்கி பதவிட வேண்டும்.

இசை வீடியோவை இங்கே பாருங்கள்.

https://share.myjosh.in/video/6e3823f3-058c-4fc7-8c05-5e550085256b?u=0x823d2f0ffa324169

ஜோஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த இசை வீடியோவை பார்க்கலாம்:

போலியை உடைத்தெறியுங்கள்! உங்களின் உண்மையான முகத்தைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு ஜோஷ் #RealHai என்னும் போட்டியை வழங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் அனைவரையும் ஜோஷ் வணங்குகிறது. நடனம், இசை, உடற்பயிற்சி, சமையல், நகைச்சுவை என இவற்றில் எதில் திறமையானவர்களாக இருந்தாலும், அச்சமின்றி கலந்து கொள்ளுங்கள். இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உடனே இந்த போட்டியில் பங்கு கொண்டு, அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள்.

#RealHai என்னும் ஹேஷ்டாக்கை பயன்படுத்தி ஜோஷ் ஆப்பில் வீடியோக்களை பதிவிடுங்கள்; IIFA இல் உங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்

இந்த போட்டியில் பங்கு கொள்ள ஜோஷ் ஆப்பை டவுன்லோடு செய்து, #RealHai என்னும் ஹேஷ்டாக்கை பயன்படுத்தி பல வீடியோக்களை உருவாக்கி பதவிடுங்கள். அபுதாபியில் நடைபெறவிருக்கும் IIFA 2022 விருதுகள் நிகழ்ச்சிக்கான கோல்டன் டிக்கெட்டை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள் அல்லது 2022 ஐபிஎல் இறுதிப்போட்டியில் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் அணியை நேரடியாக சென்று ஆதரிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறுங்கள். முக்கியமாக வாராந்திர பரிசுகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Story first published: Thursday, May 5, 2022, 12:38 [IST]
Desktop Bottom Promotion