Latest Updates
-
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
அடுத்த 140 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தில் இன்னும் 140 நாட்களில் புதன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்நிலையில் இந்த மூன்று கிரகங்களின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளன. மேலும் கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். கிரகங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தைக் கொண்டுள்ளதால், அவற்றின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாகவும், சில ராசிகளுக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.

ஜோதிடத்தில் இன்னும் 140 நாட்களில் புதன், செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்நிலையில் இந்த மூன்று கிரகங்களின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். அதுவும் நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது அடுத்த 140 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் பொற்காலமாக இருக்கும். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் வேலை மற்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தந்தைவழி சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணமான தம்பதியர்களின் தாம்பத்திய உறவு இனிமையாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இக்காலத்தில் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். குடும்பச் சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும். வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் அற்புதமான காலமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் பணியிடந்தாலும், அதில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். இதுவரை குடும்பத்தில் பிரச்சனைகள், குழப்பங்கள் இருந்தால், இக்காலத்தில் அனைத்தும் நீங்கி குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அடுத்த 140 நாட்கள் எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரம் செய்து வருபவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வாகனம் அல்லது வீடு வாங்க நினைத்தால், அதற்கான யோகம் இக்காலத்தில் உருவாகும்.



Click it and Unblock the Notifications