Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
சனி உதயத்தால் உருவான ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்கு அட்டகாசமா இருக்கப் போகுது...
2022 பிப்ரவரி 24 ஆம் தேதி அஸ்தமனமான சனி பகவான் உதயமானார். இதனால் ஒருசில ராசிகளில் ராஜயோகம் உருவாகி, அந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இக்காலத்தில் வணிகம் மற்றும் அரசியலில் வெற்றி பெறுவார்கள்.
நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் அதிக செல்வாக்கு செலுத்துபவராக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அவரது அருள் ஒருவருக்கு கிடைத்தால், அவர் ராஜ வாழ்க்கையை வாழ்வார். நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் ஆகும். ஜோதிடத்தின் படி, கிரகங்களில் ஏற்படும் மாற்றம் மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது.

எப்படி சனி அஸ்தமனம் ஒருவரது வாழ்க்கையை பாதிக்கிறதோ, அதேப் போல் சனி உதயமும் 12 ராசிகளையும் பாதிக்கும். 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி அஸ்தமனமான சனி பகவான் உதயமானார். இதனால் ஒருசில ராசிகளில் ராஜயோகம் உருவாகி, அந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இக்காலத்தில் வணிகம் மற்றும் அரசியலில் வெற்றி பெறுவார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இப்போது சனி உதயத்தால் எந்த ராசிகளில் ராஜயோகம் உருவாகியுள்ளது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பார்கள். அரசியலில் உள்ளவர்கள், தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது அரசியலில் பெரிய பதவியைப் பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள், லாபம், செலவு என கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். உறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவு சுமுகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் தொழில் விஷயங்களில் அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் இதர சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, அதிர்ஷ்டம் உடன் இருக்கும் மற்றும் அதிகம் சேமிக்க வாய்ப்புள்ளது. சனி தொடர்பான தொழில்களான எண்ணெய், பெட்ரோலியம், சுரங்கம், இரும்பு போன்றவற்றில் வேலை செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பணியிடத்தில் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெற்று வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமாகவும், சிறப்பாகவும் இருக்கும். அரசியலில் இருப்பவர்கள், வெற்றி பெறுவார்கள். நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், முதலீடு செய்ய இது நல்ல காலம். பயணங்கள் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறந்த நேரத்தைக் கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் சுய வளர்ச்சியில் அதிக ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பணியின் காரணமாக நீண்ட பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் வணிகம் வெளிநாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் அதிக லாபம் ஈட்டுவீர்கள். அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
