Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
ராகுவால் 2022-ல் இந்த 6 ராசிக்காரங்க பல ஆபத்துக்களை சந்திக்கப்போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...!
ஜோதிடத்தில் ராகு ஒரு சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. ராகு பல அசுப யோகங்களை ஏற்படுத்துகிறார், இதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
ஜோதிடத்தில் ராகு ஒரு சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. ராகு பல அசுப யோகங்களை ஏற்படுத்துகிறார், இதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், ராகு இரண்டு வகையான பலன்களையும் வழங்குகிறது. ஆனால் ராகுவின் அசுப பார்வையால், வேலை, தொழில், கல்வி, வியாபாரம் போன்றவற்றில் பல போராட்டங்களுக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும்.புத்தாண்டில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதால் அதன் தாக்கம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகமாக ராகு கருதப்படுகிறது. இது மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவின் பலன்கள் சனியின் தாக்கங்களோடு ஒப்பிடப்படுகிறது. ராகு ஒரு ராசியில் ஒன்றரை வருடம் தங்கி, அதன் பிறகு மீண்டும் வேறு ராசியில் நுழைகிறார் என்று சொல்லலாம். 2022-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி காலை 10.36 மணிக்கு இரண்டாம் ராசிக்கு ராகு நுழைகிறார். ராகுவால் அடுத்த ஆண்டு முழுவதும் படாதபாடு படப்போகிற ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
ஏப்ரல் மாதத்தில், ராகு தனது லக்னத்தின் இரண்டாவது வீட்டிற்குச் செல்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தனிப்பட்ட சொத்துக்களில் எந்தவிதமான முதலீடும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தலாம்.

ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு ராகு இவர்களின் லக்னத்தில் இருப்பார். இது போன்ற சூழ்நிலையில் ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ராகு லக்னத்தில் இருப்பதால், உங்களால் அனைத்து அம்சங்களையும் சரியாக மதிப்பிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஏப்ரல் மாதத்தில், ராகு பன்னிரண்டாம் வீட்டில் அதாவது செலவின வீட்டில் சஞ்சரிக்கிறார், இதனால் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

கடகம்
2022 ஆம் ஆண்டில், ராகு உங்கள் பத்தாவது வீட்டில் அதாவது கர்ம பாவத்தில் சஞ்சரிக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில், வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் அரசியல் சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலையை மாற்ற நினைத்தாலோ அல்லது தொழில் தொடங்க நினைத்தாலோ நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். அரசு ஊழியர்களுக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் திசைதிருப்பல் மற்றும் குழப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் மூத்த பணியாளர்கள், உயர் அதிகாரிகள் அல்லது தந்தையுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு ராகு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ராகு ஏழாவது வீட்டில் அதாவது மனைவியின் வீட்டில் அமைர்கிறார். இந்த நேரத்தில் உங்கள் மனைவி உறவில் இருந்து வெளியேறலாம் அல்லது மூன்றாம் நபரிடம் ஈர்க்கப்படலாம். இந்த காலகட்டத்தில் எந்த முக்கிய முடிவையும் எடுக்கும்போது நீங்கள் குழப்பமடையலாம். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடி ஒரு பெரிய முடிவை எடுப்பது நல்லது.

தனுசு
புத்தாண்டின் தொடக்கத்தில் ராகு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்ட சிக்கல்கள் வரலாம். அதேவேளை, ஏற்கனவே இப்பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் இதிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஏப்ரல் நடுப்பகுதியில் ராகு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. மன அழுத்தம் காரணமாக, படிப்பில் கவனமின்மை ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications