Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
மேஷம் செல்லும் ராகுவால் இந்த 4 ராசிக்காரங்க கையில நிறைய பணம் சேர போகுது... இதுல உங்க ராசி இருக்கா?
ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10.36 மணிக்கு மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். மேஷ ராசிக்கு ராகு செல்வதால், 4 ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் எப்போது இடம் மாறுகிறதோ, அப்போது மனித வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படும். 2022 ஆம் ஆண்டில் சனி பகவானைத் தவிர, பல பெரிய கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. அவை குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி ஆகும். ராகு-கேது சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ராசியை மாற்றுவார்கள். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் செல்லவிருக்கிறார்கள்.

அதில் ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10.36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, ராகு-கேது இருவருமே பின்னோக்கி தான் நகர்வார்கள். இதில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு உறவுகள், பயணங்கள், நோய்கள், அரசியல் போன்றவையாக கருதப்படுகிறது. ஆகவே ராகு ராசியை மாற்றும் போது அது வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மேஷ ராசிக்கு ராகு செல்வதால், 4 ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்வதால், இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். அதோடு புதிய வழிகளின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும். அதுவும் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால், இக்காலத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், இக்காலம் உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்வதால், இப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வீடு ஒரு அதிர்ஷ்ட வீடு என்பதால், கடக ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும். மேலும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும், அதில் வெற்றி காண்பீர்கள். வியாபாரம் அமோகமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி நல்ல சாதகமான பலன்களைத் தரும். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதோடு, பணியிடத்தில் உங்களின் நல்ல செயல்திறனால் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணம் மற்றும் செல்வம் சம்பாதித்து சேர்ப்பதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். பங்குச் சந்தையில் திடீர் லாபத்தைப் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் எந்த வேலையையும் திறம்பட முடித்துக் காட்டுவீர்கள். இக்காலத்தில் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. திடீர் பண ஆதாயம் கிடைக்கும். ஒருவேளை எங்காவது உங்கள் பணம் சிக்கியிருந்தால், அதை இந்த பெயர்ச்சிக்கு பின் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
