Just In
- 13 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 14 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 24 hrs ago
மட்டன் தால்சா
- 24 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- News
சென்னையில் மே 17 பேரணி தடுத்து நிறுத்தம்.. ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நடத்த சென்றவர்கள் கைது
- Movies
நேரலையில் நிர்வாண போட்டோஸ்.. பாப் பாடகி மடோனா லைவ்-க்கு தடை.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடிவடிக்கை !
- Sports
இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
- Finance
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
18 மாதங்களுக்கு பின் மேஷம் செல்லும் ராகுவால் இந்த ராசிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்க போகுது...
ஜோதிடத்தின் படி, ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிரகங்கள் மற்றும் ராசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த ஒரு கிரகம் ராசியை மாற்றினாலும், அது மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கியமான கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதில் குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. வேத ஜோதிடத்தின் படி, ராகு 2022 மார்ச் மாதம் 17 ஆம் தேதி அன்று மேஷ ராசிக்குள் நுழைய போகிறார்.

ராகு
வேத சாஸ்திரங்களின் படி, ராகு ஒரு நிழல் கிரகம். நிழல் கிரகமான ராகு ஒருவரை தரையிலிருந்து உச்சிக்கும் அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், அந்த நபர் உயரங்களைத் தொடுவார். ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 18 மாதங்கள் ஆகும். 2022 மார்ச் 17 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு மோசமான பலன்களைத் தந்தாலும், சில ராசிகளுக்கு சுப பலன்களைத் தரும். இப்போது 18 மாதங்கள் கழித்து மேஷம் செல்லும் ராகுவால் அதிக லாபத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி நல்ல நிதி பலன்களைத் தரும். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் காண்பார்கள். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சில பெரிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். நீங்கள் ஏதேனும் ஒரு வணிகத்துடன் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் வணிகம் விரிவடையும். மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். உங்கள் ராசியில் 11 ஆம் இடத்தில் ராகு இருப்பதால், வருமானம் பெருக வாய்ப்புள்ளது.

கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் ராகு பெயர்ச்சியால் மிகுந்த பலன்களைப் பெறப் போகிறார்கள். வியாபாரிகள் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு தங்கள் துறையில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். உங்கள் ஜாதகத்தின் 5,10 மற்றும் 11 ஆம் இடத்தில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் போது, தொழிலில் மாற்றம், பெரிய வெற்றி மற்றும் புதிய வேலை ஆகியவற்றைக் காணலாம். ஆகவே இந்த ஆண்டு அரசு வேலைக்கு தயாராகுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்
2022 ராகு பெயர்ச்சியால் சனியை அதிபதியாக கொண்ட கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் உயர வாய்ப்புள்ளது. இரும்பு, எண்ணெய் போன்ற சனி சம்பந்தமான விஷயங்களை வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு முதலீட்டிற்கான நல்ல நேரம் இது. மேலும் நினைத்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.