Just In
- 3 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 11 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
இந்திய சொட்டு மருந்தை பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழப்பு! சென்னை நிறுவனத்திற்கு பெரிய சிக்கல்
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வரப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரங்க பல ஆபத்துக்களை சந்திக்க போறாங்களாம்... உஷார்!
ராகு-கேது பெயர்ச்சி ஒரே சமயத்தில் நடக்கப்போகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் அடுத்த 18 மாதங்களுக்கு ராகு மற்றும் கேதுவின் இந்த சஞ்சாரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ராகுவும், கேதுவும் ஒரே நேரத்தில் ராசிகளை மாற்றுகின்றன. ராகு ஏப்ரல் 12 அன்று மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். அதே நாளில் துலாம் ராசியில் கேது சஞ்சாரம் செய்வார்.
மேஷ ராசியில் ராகுவும், துலாம் ராசியில் கேதுவும் 18 மாதங்கள் தங்குவார்கள். எனவே இந்த 5 ராசிக்காரர்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு மற்றும் கேதுவின் இந்த சஞ்சாரத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர, இந்த பெயர்ச்சியின் போது உங்கள் வாழ்க்கையில் நிதி மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். வரப்போகிற 18 மாதங்கள் நீங்கள் கடினமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் ராகுவும், முதல் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த நேரத்தில், நீங்கள் பண பரிவர்த்தனைகள், உடல்நலம் மற்றும் உறவுகள் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களின் சுப ஸ்தானம் இருந்தால், இந்த சஞ்சாரத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும் மாற்றங்களும் காணப்படும். இந்த காலகட்டத்தில் வியாழனும் சனியும் தங்கள் சஞ்சாரத்தின் போது சுப நிலையில் இருக்கப் போவதில்லை. இந்த சஞ்சாரத்தின் போது சனி நான்காம் வீட்டிலும், வியாழன் ஆறாம் வீட்டிலும் அமைவார்கள். இதனால் இவர்கள் பல தடங்கல்களை சந்திக்கப் போகிறார்கள்.
MOST READ: ராகு-கேது பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்...!

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த நேரத்தில் நீங்கள் பாதுகாப்பின்மை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படலாம். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராகு கேது ஐந்து மற்றும் பதினோராம் வீட்டில் சஞ்சரிப்பதால். தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் ராகுவின் நிலை மிகவும் சிறப்பாக இருக்காது. இது தவிர, திட்டமிடல் மற்றும் தவறான முடிவுகளை எடுப்பதாலும் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். இது தவிர, அந்த நபரின் ஜாதகத்தில் கேது கிரகம் சாதகமாக இருந்தாலும் அல்லது சாதகமான மஹாதசா நடந்தாலும், இந்த ஜாதகர்கள் சாதாரண பலன்களைப் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசிக்கு ராகு-கேது முறையே நான்காம் மற்றும் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். கேது சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் ராகு சஞ்சாரம் உங்களுக்கு நல்லதல்ல. இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். மேலும், நீங்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பப் பிரச்சினையால் நீங்கள் நீதிமன்றம் செல்ல நேரிடலாம். பணியிடத்தில் உங்கள் வேலையைக் கெடுக்க யாராவது முயற்சி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள். வாகனத்தை கவனமாக ஓட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனம்
மீன ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமற்ற பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி மட்டுமின்றி குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.