Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
Rahu Kethu Peyarchi Palan 2022: ராகு-கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் செல்கிறார்கள். ராகு-கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என காண்போம்.
கிரகங்கள் மனித வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதில் ராகு-கேது நிழல் கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்கள் பயணிக்கும் போது தன்னுடன் இருக்கும் மற்ற கிரகங்களுடன் இணைந்தே பலனை அளிக்கின்றன. முக்கியமாக இந்த நிழல் கிரகங்கள் எப்போதும் பின்னோக்கி தான் பயணிக்கும். மேலும் ராகு மற்றும் கேது ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் செல்கிறார்கள். இதில் ராகு செவ்வாய் ஆளும் மேஷ ராசி செல்வதால், பெரும்பாலும் எதிர்மறையான பலன்களைத் தரும். அதோடு பொருள்சார் வெற்றியையும், புகழையும் தரும். அதே வேளையில் கேது சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்வதால், மிதமான நல்ல பலன்களைத் தரும். இருப்பினும், பல குறுகிய கால பிரிவினைகள் மற்றம் காதல் முறிவுகள் போன்றவை ஏற்படும். சரி, இப்போது ராகு-கேது பெயர்ச்சியால் 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி வரை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

2022 ராகு பெயர்ச்சி - மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். விரைவில் பணம் சம்பாதிப்பார்கள் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சுயநலமான இயல்பு வாழ்வில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் நற்பெயர் பறிபோகலாம். இருப்பினும் சிலருக்கு குறுகிய காலத்திற்கு திடீர் அதிர்ஷ்டம், பணம், புகழ் கிடைக்கும்.

2022 கேது பெயர்ச்சி - மேஷம்
கேது மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், உங்களுக்கும் உங்கள் காதலன்/காதலிக்கும் இடையே குழப்பம் ஏற்படலாம். வியாபாரத்தில் திடீர் லாபங்கள் மற்றும் திடீர் இழப்புகள் ஏற்படலாம். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு இனிமையாகவும் நெருக்கமாகவும் இருக்காது. சிலர் பிரேக் அப் மற்றும் விவாகரத்தால் பாதிக்கப்படலாம். மொத்தத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கையின்மை மற்றும் பரஸ்பர புரிதல் குறைபாடு இருக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்களே கிடைக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். இக்காலத்தில் வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கக்கூடும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

2022 கேது பெயர்ச்சி - ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் நீதிமன்ற வழக்குகள் மற்றும் எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலத்தில் உங்கள் போட்டியாளர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் விபத்துக்களை சந்திக்கலாம். இருப்பினும் பெரும்பாலானோருக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். குறிப்பாக சமூக ஊடகங்களில் உங்கள் புகழ் அதிகரிக்கும். சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு கொள்வார்கள். வேலை மற்றும் வியாபாரம் லாபம் மற்றும் புகழுடன் நன்றாக இயங்கும். வருமான ஆதாரம் அதிகரிக்கும் மற்றும் பலர் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சியுடன் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளைப் பெறுவார்கள்.

2022 கேது பெயர்ச்சி - மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு கேது செல்வதால், உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலோ சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். பலர் தங்கள் காதல் வாழ்க்கையில் பிரேக்-அப்பை சந்திக்கலாம். உங்கள் துணையைத் தவிர வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டு, அது உங்கள் வாழ்க்கையில் துயரத்தை ஏற்படுத்தலாம். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணையை ஏமாற்றலாம் மற்றும் சிலர் ஏமாற்றப்படுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் விசுவாசப் பிரச்சினைகள் இருக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் அரசாங்க வேலை அல்லது டிஜிட்டல் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள். சிலர் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் மாறலாம். சிலர் அரசு வேலை அல்லது அரசியல் மூலம் உயர் பதவியை அடைவார்கள். இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருள் மேம்பாடு மற்றும் ஐடி, பொறியியல் போன்ற துறைகளில் உள்ளவர்கள் அங்கீகாரம், வெற்றி மற்றும் வளர்ச்சியைப் பெறலாம்.

2022 கேது பெயர்ச்சி - கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு கேது செல்வதால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். இல்லற வாழ்வில் நிம்மதி குறையும். சிலர் தங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவினையால் பாதிக்கப்படலாம். நிலம் அல்லது சொத்து இழப்பு ஏற்படலாம். சிலர் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

2022 ராகு பெயர்ச்சி - சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில் குடியேறலாம். உயர்கல்விக்கான உங்கள் பாதையில் சில தடைகள் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் உங்கள் நிதி நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் செல்வம் வேகமாக வந்து செல்வதை நீங்கள் காணலாம். மேலும் உங்கள் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம் மற்றும் உங்கள் தந்தையுடனான உறவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்காது. இருப்பினும், உங்கள் தந்தையின் சமூக மரியாதை உயரும்.

2022 கேது பெயர்ச்சி - சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் கடின உழைப்புக்குப் பிறகு மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் கூடுதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் உடன்பிறந்தவர்கள் மூலம் ஓரளவு செல்வம் பெறலாம். இருப்பினும், சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு சில நேரங்களில் பாதிக்கப்படலாம்.

2022 ராகு பெயர்ச்சி - கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் லாட்டரி, பரம்பரை அல்லது மாமியார் மற்றும் உறவினர்களிடமிருந்து திடீர் மற்றும் எதிர்பாராத பணத்தை பெறக்கூடும். திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கையில் பதற்றம் இருக்கும். சிலர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். எதிரிகள் சிலர் பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இக்காலத்தில் நீங்கள் சில சொத்துக்களையும் பெற வாய்ப்புள்ளது.

2022 கேது பெயர்ச்சி - கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் செலவுகள் அதிகமாகும். உங்கள் வருமானம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்காது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை மற்றும் மோதல்கள் இருக்கும். உங்கள் துணை உங்களை கடினமான நேரத்தில் விட்டுச் செல்லக்கூடும். சிலர் தங்கள் காதல் வாழ்க்கையில் மனவேதனை மற்றும் பிரிவினையால் பாதிக்கப்படுவார்கள். மொத்தத்தில் இக்காலத்தில் காதல் வாழ்க்கை மந்தமாகவும், தொழில் வாழ்க்கை பரபரப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வணிகம் மற்றும் கூட்டு வேலைகளில் வெகுமதிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுப் பணிகள் சிறப்பாக நடக்கும். பலர் தங்கள் தொழிலில் கடின உழைப்பால் வெளிச்சத்திற்கு வருவார்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலக்குறைவால் பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கை மோசமாக இருக்கும்.

2022 கேது பெயர்ச்சி - துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். சில ரகசிய விவகாரங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை அழிக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் சில மனக்கசப்புகள் இருக்கும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் பொருள் வசதியைப் பெறுவீர்கள்.

2022 ராகு பெயர்ச்சி - விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் வெற்றி காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெறலாம். அரசியலிலும் வெற்றி உண்டாகும். சிலர் வழக்கறிஞராகவும் மருத்துவராகவும் மாறலாம். மருத்துவ துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சிலர் அரச வேலையில் உயர் பதவியைப் பெறுவார்கள்.

2022 கேது பெயர்ச்சி - விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் பிரச்சனைகளால் சொந்த ஊருக்கு வருவார்கள். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிக நெருக்கமான பிணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வருமானம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் உங்கள் அதிர்ஷ்டத்தில் திடீர் உயர்வு இருக்கும். அதுவும் 2022-2023ல் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும், செழிப்பும், மகிழ்ச்சியும் உங்கள் நிழலைப் போல உங்களைத் துரத்தும்.

2022 கேது பெயர்ச்சி - தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் நண்பர்கள், சக நண்பர்கள், அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை விசுவாசத்துடன் இருப்பார்கள். ஆனால் உங்களில் சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றலாம்.

2022 ராகு பெயர்ச்சி - மகரம்
மகர ராசியின் 4 அவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்திலும் உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் வருமானம் எப்போதும் அதிகமாக இருக்கும். நீங்கள் புதிய வீட்டிற்கு மாறலாம் அல்லது சில புதிய சொத்துகளையும் வாங்கலாம். சிலர் புதிய வாகனமும் வாங்கலாம். இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கையில் அமைதியின்மை இருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில மோதல்கள் இருக்கும்.

2022 கேது பெயர்ச்சி - மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் தொழிலில் சில புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். ஆனால் பணிச்சுமை மற்றும் பரபரப்பான அட்டவணை உங்களை வேலையில் மகிழ்ச்சியற்றதாக்கும். உங்கள் வியாபாரத்தில் சில இழப்புகள் இருக்கலாம். ஆனால் தொழில் வாழ்க்கை ஓரளவாக இருக்கும். சிலருக்கு வருமான உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

2022 ராகு பெயர்ச்சி - கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் தங்கள் படைப்பாற்றல் மற்றும் சிறப்புத் திறன்களால் வெற்றியையும் புகழையும் பெறுவார்கள். வருமானத்தில் வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு இருக்கும். இருப்பினும், வெற்றி மற்றும் செல்வத்தைப் பெற கடின உழைப்பையும் கூடுதல் முயற்சியையும் எடுக்க வேண்டும். சிலர் குறுகிய காலத்திற்கு எளிதான பணத்தை அனுபவிக்கலாம்.

2022 கேது பெயர்ச்சி - கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள், குருக்கள், சகாக்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆதாயம் கிடைக்கும்.

2022 ராகு பெயர்ச்சி - மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் செல்வமும் லட்சியமும் உண்டாகும். இருப்பினும், 2022-2023 இல் நீங்கள் சோம்பேறியாகவும், ஆறுதலை விரும்புபவராகவும் மாறலாம். பல மூலங்களிலிருந்து ஆதாயங்களும் வருமானமும் இருக்கும். ஆனால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தங்கள் இருக்கும். குடும்பத்தில் குழந்தை பிறப்பிற்கு சாத்தியம் உள்ளது. மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி வெற்றி காண்பார்கள். 2022-2023 காலகட்டத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு வளமான வாழ்க்கையை நடத்துவீர்கள்.

2022 கேது பெயர்ச்சி - மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் எதிர்பாராத லாபமும், எதிர்பாராத நஷ்டமும் உண்டாகும். அமானுஷ்யம், ஆன்மிகம், ஜோதிடம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் புகழையும் வெற்றியையும் பெறுவார்கள். வெளியூர் பயணம் பலன் தரும். பணிச்சுமை உங்கள் ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு இடையூறாக இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











