மேஷ ராசிக்காரங்க உண்மையா எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவங்க-ன்னு தெரியுமா?

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் நிறைந்தவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தோ, மற்றவர்களின் பேச்சைக் கேட்டோ வாழாமல், தங்களின் நம்பிக்கைகள், லட்சியங்கள் மற்றும் யோசனைகளின் படியே வாழ்வார்கள்.

ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் முதல் ராசியாக மேஷம் உள்ளது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், ஊக்கமுள்ளவர்கள் மற்றும் நம்பிக்கையான தலைவர்கள். மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் நிறைந்தவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை சார்ந்தோ, மற்றவர்களின் பேச்சைக் கேட்டோ வாழாமல், பெரும்பாலும் தங்களின் சொந்த நம்பிக்கைகள், லட்சியங்கள் மற்றும் யோசனைகளின் படியே வாழ்வார்கள்.

Positive And Negative Traits Of Aries In Tamil

பொதுவாக உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்கள் இருக்கும். இதில் மேஷ ராசிக்காரர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. மேஷ ராசியைச் சேர்ந்தவரிடம் சில அற்புதமான நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளும் உள்ளன. மேஷ ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளை அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இது மேஷ ராசிக்காரர்களை கையாள்வதற்கு சற்று வசதியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷ ராசிக்காரர்களின் நேர்மறை பண்புகள்:

மேஷ ராசிக்காரர்களின் நேர்மறை பண்புகள்:

வலுவான தலைமைப் பண்பு

மேஷம் முதல் ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களிடம் இயற்கையாகவே தலைமைத்துவ பண்பு இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். வலுவான தலைமைப் பண்பு இருப்பதால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றியாளராக இருப்பார்கள். இவர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் அல்ல. தங்களுக்கான அதிர்ஷ்டத்தையும், வாய்ப்பையும் தாங்களே உருவாக்குபவர்கள்.

அற்புதமான தன்னம்பிக்கை

அற்புதமான தன்னம்பிக்கை

மேஷ ராசிக்காரர்களிடம் உள்ள தன்னம்பிக்கை எப்போதும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும். இந்த நம்பிக்கை இறுக்கமான சூழ்நிலைகளில் கூட நீடிக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் மற்றும் வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் ஒரு முன்னோடியாக இருக்க விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களைப் பின்பற்றுவதை விட சொந்த வழியிலேயே எந்த விஷயங்களையும் செய்ய விரும்புவார்கள்.

நேர்மறை ஆற்றல்

நேர்மறை ஆற்றல்

முதல் ராசியாக மேஷம் இருப்பதால், இவர்களிடம் நேர்மறை ஆற்றல் நிறைய இருக்கும். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளில் கூட உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள். முக்கியமாக எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்மறையாக யோசிக்காமல், எதையும் நேர்மறையுடன் யோசித்து செயல்படுவார்கள்.

வீரம்/தைரியம்

வீரம்/தைரியம்

மேஷ ராசிக்காரர்கள் நம்பமுடியாத வலிமையைக் கொண்டவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டார்கள். இறுக்கமான சூழ்நிலைகளிலும் வாழ்க்கையின் வீழ்ச்சிகளிலும் தைரியமாக இருப்பார்கள்.

படைப்பாற்றல்

படைப்பாற்றல்

மேஷ ராசிக்காரர்கள் எப்போதுமே வித்தியாசமாக ஏதாவது செய்வதற்கான வழியை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் ஒரே வேலையை செய்ய விரும்பமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கலை பணிகளின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.

மேஷ ராசிக்காரர்களின் எதிர்மறை பண்புகள்:

மேஷ ராசிக்காரர்களின் எதிர்மறை பண்புகள்:

சுயநலம்

மேஷ ராசிக்காரர்களின் எதிர்மறை பண்புகளில் ஒன்று சுய முன்னேற்றம் குறித்த கவலை. நீங்கள் ஒன்றை செய்து முடிப்பேன் என்று சொன்னால், வழியில் எது வந்தாலும் அதை பொருட்படுத்தாமல், கூடுதல் முயற்சி செய்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் விட உங்களுக்கு அதிக அறிவும், திறன்களும் இருப்பதாக நீங்கள் உணருவதால், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு நீங்கள் சில சமயங்களில் உணர்ச்சியற்றவர்களாக இருப்பீர்கள்.

கவனத்தை தேடுவது

கவனத்தை தேடுவது

மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களின் கவனம் எப்போதும் தன்மீது இருக்க வேண்டுமென நினைப்பார்கள். எப்போதும் எல்லாவற்றிலும் மையமாக இருக்க விரும்புவார்கள். எப்போதும் மற்றவர்களை விட சிறப்பாக எதையும் செய்ய விரும்புவார்கள். அவர்களின் பணிகளில் குறைபாடுகளையும் தடைகளையும் எதிர்கொண்டால் மற்றவர்களின் கையை ஒருபோதும் பிடிக்க மாட்டார்கள். இலக்குகளை திறமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற உங்கள் கூடுதல் ஆற்றலை செலவழிப்பார்கள்.

அதிக கோபம்

அதிக கோபம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சட்டென்று கோபம் வரும். இந்த ராசிக்காரர்களை கோபப்படுத்த அதிக நேரம் எடுக்காது. அதே வேளையில் இந்த ராசிக்காரர்களிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்றால், கோபத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது. இவர்கள் விரும்பும் வழியில் விஷயங்கள் நடக்காதபோது அல்லது இவர்களது வேலையில் யாராவது தவறு கண்டால் அதிக கோபப்படுவார்கள்.

பொறுமையின்மை

பொறுமையின்மை

மேஷ ராசிக்காரர்களுக்கு பொறுமை அவ்வளவு எளிதில் வராது. விரும்பும் அனைத்தையும் உடனே பெற வேண்டுமென விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடியாது. வெற்றியின் வழியில் உள்ள குறைபாடுகளை பொறுமையாக உட்கார்ந்து பகுப்பாய்வு செய்ய மாட்டார்கள். உடனே யோசிக்காமல் ஒரு மாற்று திட்டத்தை செயல்படுத்துவார்கள்.

யோசிக்காமல் முடிவு எடுப்பது

யோசிக்காமல் முடிவு எடுப்பது

மேஷ ராசிக்காரர்களிடம் உள்ள மற்றொரு மோசமான குணம் என்றால், அது எதையும் நன்கு யோசித்து பகுப்பாய்வு செய்து முடிவு எடுக்காமல், விரைவான முடிவை எடுப்பார்கள். இந்த முடிவு சரியானது அல்ல என்பதை பின்னரே உணர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion