Just In
- 5 hrs ago
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- 5 hrs ago
போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்...!
- 7 hrs ago
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- 7 hrs ago
சிம்பிளான... சிக்கன் கிரேவி
Don't Miss
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Automobiles
வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்
- News
உலகை மீண்டும் வழிநடத்துவோம்.. "அமெரிக்கா இஸ் பேக்".. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான ஒரு பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர். இந்த பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையின் போது பெங்காலிகள் இனிப்புக்களை உருவாக்குவார்கள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் வீட்டின் பழைய பொருட்களை எரிப்பார்கள், பஞ்சாபிகள் நெருப்பை உருவாக்குவார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒட்டுமொத்த தேசமும் அறுவடைக்கான புதிய பருவத்தை வெவ்வேறு பாணிகளில் சந்தோஷம் என்ற ஒரே கருத்துடன் வரவேற்கிறார்கள்.
MOST READ: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு தெரியுமா?
இப்போது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் எப்படியெல்லாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள், அப்பண்டிகையை எந்த பெயரில் அழைக்கிறார்கள் என்று காண்போம்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விடியல் பருவத்தின் வித்தியாசமான அம்சத்தைக் குறிக்கிறது. அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை. இந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை நெருப்பில் இட்டு எரிப்பார்கள். இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தான் பொங்கல். இந்நாளில் புத்தாடை அணிந்து, புதிய பானையில் அறுவடை செய்த பச்சரிசி, வெல்லம், நெய், பால் கொண்டு சுவையாக பொங்கல் உணவு சமைத்து சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் கொண்டாடப்படுவது தான் மாட்டுப் பொங்கல். இந்நாளில் விவசாயத்திற்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து, பொங்கல் செய்து படைப்பார்கள். இந்நாளில் தான் ஜல்லிக்கட்டு என்னும் பிரபலமான வீர விளையாட்டை விளையாடுவர். நான்காம் நாள் காணும் பொங்கல். இந்நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாகவும் நேரத்தைக் கழிப்பார்கள்.

ஆந்திரா
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையானது தமிழ்நாட்டைப் போன்றே நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு முதல் நாள் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையும், இரண்டாம் நாள் குடும்பத்துடன் மகர சங்கராந்தியும், மூன்றாம் நாள் கனுமா என்னும் கால்நடைகளுக்கு உணவளிப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் முக்கனுமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் சில வீர விளையாட்டுக்களையும் விளையாடுவர்.

பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை இங்குள்ள மக்கள் சக்ராத் அல்லது கிச்ச்டி என்று அழைக்கிறார்கள். இதில் முதல் நாளாக மகர சங்கராந்தியன்று, மக்கள் ஏரி மற்றும் நதிகளில் குளித்துவிட்டு, இனிப்புக்களை செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்நாளில் இவர்கள் எள் மற்றும் வெல்லம் கொண்டு உருண்டை பிடித்து உண்பது தான் இந்நாளின் ஸ்பெஷல். இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தான் மக்ராத். இந்நாளில் இப்பகுதியினர் பருப்பு, அரிசி, காலிஃப்ளவர், பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு கிச்சடி சமைத்து உண்டு இப்பண்டிகையைக் கொண்டாடுவர்.

குஜராத்
குஜராத் மக்களின் முக்கியமான பண்டிகை என்றால் அது மகர சங்கராந்தி அல்லது உத்ராயன். இந்த பண்டிகையானது இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஜனவரி 14 ஆம் நாள் கொண்டாடப்படுவது தான் உத்ராயன். இந்நாளில் குஜராத் மக்கள் பட்டங்களை விட்டு பண்டிகையை கொண்டாடுவர். இரண்டாம் நாள் வாசி உத்ராயன் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் குளிர்கால காய்கறிகள், எள்ளு விதைகள், வேர்க்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு உந்திலு என்னும் உணவு தயாரித்து உண்பார்கள்.

பஞ்சாப்
பஞ்சாப்பில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13 ஆம் நாள் லோஹ்ரி என்னும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை குளிர்கால பயிர்களின் அறுவடையுடன் தொடர்புடையது. மேலும் லோஹ்ரியின் காலம் கரும்பு அறுவடைக்கு ஏற்ற பருவமாக கருதப்படுகிறது. லோஹ்ரிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது தான் மகி. இது பஞ்சாபில் விவசாயிகளால் நிதி புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. பஞ்சாபின் சில பகுதிகளில் லோஹ்ரி அன்று காத்தாடி பறக்கவிடுவார்கள். மேலும் லோஹ்ரி அன்று இரவு, மக்கள் நெருப்பைக் கொளுத்தி கடவுளை வணங்குவார்களாம்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மகர சங்கராந்தி. இந்த மாநிலத்தில் இப்பண்டிகையானது மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது இப்பகுதி மக்கள் இனிப்புக்களான எள் உருண்டை, அல்வா, பூர்ண போலி போன்றவற்றை பரிமாறிக்கொள்வார்களாம். இங்கு முதல் நாள் போகி என்றும், இரண்டாம் நாள் சங்க்ரந்த் என்றும், மூன்றாம் நாள் கிங்க்ராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் இந்த அறுவடை பண்டிகையின் ஸ்பெஷலே நா ஊறும் இனிப்புக்கள் மற்றும் நற்பதமான அரிசி வாசனையும் தான். இதில் புலி பித்தே, பாடிசப்தா, மால்போவா, நர்கெல் நாடு, டில் நாடு ஆகியவை பௌஷ் பர்பனைக் குறிக்கும் மிகவும் பிரபலமான இனிப்பு உணவுகள் ஆகும்.
பௌஷ் என்ற வார்த்தையின் தோற்றம் தாய் என்ற தமிழ் வார்த்தையைப் போன்றது. இது வங்காள நாட்காட்டியின்படி மாதத்தின் பெயரிலிருந்து வருகிறது. பர்பன் என்ற சொல்லுக்கு பெங்காலி பண்டிகை என்று பொருள்.
மேற்கு வங்காளம் பாரம்பரிய கங்கா சாகர் திருவிழாவிற்கும் பிரபலமானது. இந்த திருவிழாவின் போது மில்லியன் கணக்கான பக்தர்கள் கங்கை நதி மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமத்திற்கு வந்து விடியற்காலையில் குளித்து விட்டு, சிவன் மற்றும் கங்கா தேவியை வணங்குவதற்கு வருகிறார்கள். மேலும் மகர சங்கராந்தி அன்று நீதிக்கான இந்து கடவுளான தர்மமும் வணங்கப்படுகிறது.