Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் நிறைய நன்மைகளைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் கிரக மாற்றங்கள் குறித்தும், அந்த கிரக மாற்றங்களால் நிறைய நன்மைகளைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் குறித்தும் காண்போம்.
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் சிறப்புமிக்கதாக விளங்குகிறது. ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளை சந்திக்கலாம். அதே சமயம் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இப்போது 2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கும் கிரக மாற்றங்கள் குறித்தும், அந்த கிரக மாற்றங்களால் நிறைய நன்மைகளைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் குறித்தும் காண்போம். உங்கள் ராசி அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் மாத கிரக மாற்றங்கள்
2022 ஏப்ரல் 07 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு செல்கிறார். அதற்கு அடுத்த நாள், அதாவது 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு செல்கிறார். அதன் பின் 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றுகிறார்கள். அதில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் செல்கிறார்கள். பின்னர் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி குரு மீன ராசிக்கு செல்கிறார். 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து 2022 ஏப்ரல் 25 ஆம் தேதி புதன் ரிஷப ராசிக்கு செல்கிறார். பின்பு 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு செல்கிறார். இறுதியாக 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு செல்கிறார்.
இப்படி ஒரே மாதத்தில் 9 கிரகங்கள் ராசியை மாற்றுவதால், பின்வரும் ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

மிதுனம்
2022 ஏப்ரல் மாதமானது மிதுன ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் மாதமாகும். இம்மாதத்தில் சனி ராசியை மாற்றுவதால், இந்த ராசிக்காரர்கள் சனியின் மோசமான தாக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். நிலுவையில் இருக்கும் வேலைகள் இந்த மாதத்தில் முடிவடையும். புதிய நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும. வருமான ஆதாரம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைத்திருந்தால், அதற்கு இது சரியான நேரம். இம்மாதத்தில் வீட்டிற்கு தேவையான ஒரு முக்கியமான பொருளை வாங்க வாய்ப்புள்ளது.

மகரம்
ஏப்ரல் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான மாதமாகும். ஏற்கனவே சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு இம்மாதம் பண விஷயத்தில் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
