Latest Updates
-
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?
செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் 5 கிரகங்களின் இடமாற்றத்தால் யாருக்கு நல்லா இருக்கும்-ன்னு தெரியுமா?
2021 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், 5 கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றுகின்றன. இந்த கிரகங்களில் புதன், சூரியன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் ஆகியவை அடங்கும்.
கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கும் ஒரு சிறப்பான உறவு உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசிகளின் தங்களின் இடத்தை மாற்றிக் கொண்டு, நமது வாழ்வில் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், 5 கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றுகின்றன. இந்த கிரகங்களில் புதன், சூரியன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் ஆகியவை அடங்கும்.

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி
செப்டம்பர் 6 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த ராசியில் சுக்கிரன் அக்டோபர் 2 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பிறகு அது விருச்சிகத்திற்கு நகரும். ஜோதிடத்தின் படி, சுக்கிர பகவான் இந்த உலகின் அனைத்து பொருள் இன்பங்களுக்கும் காரணியாக கருதப்படுகிறார். அவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி. கன்னி ராசியில் சுக்கிரன் பலவீனமானவராகவும், மீன ராசியில் உச்சம் பெற்றவராகவும் கருதப்படுகிறார். பொதுவாக எந்த ஒரு கிரகமும் அதன் ராசியில் வலுவான நிலையில் தான் இருக்கும்.

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி இடம் பெயர்ந்து, அந்த ராசியில் அக்டோபர் 22 ஆம் தேதி வரை இருக்கும். கன்னி ராசிக்கு செவ்வாய் வருவதா சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜோதிடத்தில், செவ்வாய் கோபம், போர், வலிமை, தைரியம், நிலம், இரத்தம் போன்ற காரணிகளாக கருதப்படுகிறது. இத்தகைய செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதியாவார்.

மகர ராசியில் குரு பெயர்ச்சி
குரு பகவான் செப்டம்பர் மாதம் இடம் மாறப் போகிறார். அதுவும் இவர் தனது சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று மகர ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் நவம்பர் 21 ஆம் தேதி வரை இருப்பார். மகர ராசிக்கு குரு வருவதால், இப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், குரு அறிவு, அதிர்ஷ்டம், திருமணம், வளர்ச்சி, குழந்தைகள் போன்ற காரணிகளாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.

கன்னி ராசியில் சூரிய பெயர்ச்சி
செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் மாறி, அங்கு அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருப்பார். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். இவர் மேஷ ராசியில் வலிமையாகவும், அதிக சக்தி வாய்ந்தவராகவும் இருப்பார். அதே வேளையில் துலாம் ராசியில் பலவீனமான நிலையில் இருப்பார்.

துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி
செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் அக்டோபர் 2 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தில், மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி புதன். இத்தகைய புதன் கன்னி ராசியில் சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் மீன ராசியில் பலவீனமாகவும் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications
