Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
மே மாதத்தில் அதிக நன்மைகளைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கிரங்களின் நிலைகளால் மே மாதம் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், முன்னேற்றத்தையும் தரப் போகிறது. இப்போது 2022 மே மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு அறபுதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
2022 ஏப்ரல் மாதத்தில் குரு, ராகு, கேது போன்ற பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றியுள்ளன. அதோட ஏப்ரல் மாதத்தின் இறுதியில் சனி பகவான் தனது ராசியை மாற்றியுள்ளார். இந்நிலையில் மே மாதத்தில் நுழைந்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் குறுகிய இடைவெளியில் சில கிரகங்கள் ராசியை மாற்றும். அந்த வகையில் இந்த மே மாதத்தில் மூன்று முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.

அதில் 2022 மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்கு செல்கிறார். செவ்வாய் 2022 மே 17 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். 2022 மே 23 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதற்கிடையே புதன் மே 10 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகர்கிறார். இந்த கிரங்களின் நிலைகளால் மே மாதம் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், முன்னேற்றத்தையும் தரப் போகிறது. இப்போது 2022 மே மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு அறபுதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், மே மாதத்தில் பல மன பிரச்சனைகளை சமாளிப்பார்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு மூலங்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாதத்தில் கடைசியில் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புக்கள் அமையும்.

கடகம்
மே மாதத்தில் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். சூரியன் மற்றும் புதனின் ராசி மாற்றத்தால் பல வழிகளில் நற்பலன்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இம்மாதத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இம்மாதத்தில் உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். உங்களின் திறன்கள் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் வேலையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் எதிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களின் திட்டங்கள் வெற்றி பெறும். புதிதாக தொழில் தொடங்கினால் முன்னேற்றம் கிடைக்கும். இக்கால கட்டத்தில் மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்கள், மே மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிபவர்களின் பணி பாராட்டப்படும். இருப்பினும், இந்த மாதத்தில் உங்கள் பேச்சில் கொஞ்சம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
