Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் இந்த 4 கிரக பெயர்ச்சியால் பலருக்கு யோகம் அடிக்கப்போகுது...
2022 பிப்ரவரியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தல் 12 ராசிகளும் சுப, அசுப பலன்களைப் பெறலாம்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. கிரகங்களின் இட மாற்றங்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்ல தாக்கமாகவோ, கெட்ட தாக்கமாகவோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் 2022 பிப்ரவரியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தல் 12 ராசிகளும் சுப, அசுப பலன்களைப் பெறலாம். இப்போது 2022 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் எவையென்பதைக் காண்போம்.

சூரிய பெயர்ச்சி
தற்போது சூரியன் மகர ராசியில் சஞ்சரித்துள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் சூரியன் சுமார் ஒரு மாத காலம் பயணித்து வருவார். அதன் பின் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுவார். கும்பம் செல்லும் சூரியனால் அனைவரின் வாழ்க்கையிலும் ஒருவித தாக்கம் நிச்சயம் இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தனுசு ராசியில் செவ்வாய் பயணித்து வருவார். பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.46 மணிக்கு செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் மாறவுள்ளார். பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடக்கும் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் நிச்சயம் ஒருவித மாற்றம் ஏற்படும்.

புதன் பெயர்ச்சி
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் மகர ராசியில் வக்ர நிலையில் புதன் பயணித்து வருவார். அதன் பின் பிப்ரவரி 04 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.16 மணிக்கு புதன் நேர்கதியில் மகர ராசியில் பயணிக்க தொடங்கி கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்பத்தில் புதன் சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். மேலும் புதனின் சுற்றுப்பாதை ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும் சிந்தனைத் திறனுக்கும் நல்லது.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிரன் காதல், அழகு, ஆடம்பரம், கலை, இலக்கியம், படைப்பு நாட்டம் மற்றும் கவிதை உணர்வு ஆகியவற்றைக் குறிப்பவர். இத்தகைய சுக்கிரன் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தனுசு ராசியில் பயணிப்பார். அதன் பின் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.53 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் மாறுகிறார். ஏற்கனவே மகரத்தில் சனி இருப்பதால், சனியுடன் இணைந்திருப்பார். மகரம் சுக்கிரனின் நட்பு ராசி என்பதால் பலன்கள் நன்றாகத் தான் இருக்கும். அதுவும் இந்த சுக்கிரனின் ராசி மாற்றத்தால் வாழ்வில் மகிழ்ச்சியும், வளரும் பெருகும்.



Click it and Unblock the Notifications
