Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
கிரக மாற்றங்களால் டிசம்பர் மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்கப் போகுது...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் மாறுவதால், ஒவ்வொரு ராசிக்காரரும் ஒவ்வொரு மாதிரியான பலன்களைப் பெறுவார்கள்.
2021 ஆம் ஆண்டு முடிவிற்கு வருகிறது. ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் தொடங்க போகிறது. இந்த மாதம் அனைவருக்குமே ஒருவித சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் மாறுவதால், ஒவ்வொரு ராசிக்காரரும் ஒவ்வொரு மாதிரியான பலன்களைப் பெறுவார்கள்.

அந்த வகையில் 2021 டிசம்பரில் நிகழும் கிரக மாற்றங்களால் 5 ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இப்போது எந்தெந்த கிரகங்கள் எப்போது இடம் மாறுகின்றன மற்றும் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2021 டிசம்பர் மாத கிரக மாற்றங்கள்
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். அதன் பின் டிசம்பர் 8 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் மாறுகிறார். பின் டிசம்பர் 10 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கு இடம் மாறவுள்ளார். பின்பு சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 16 ஆம் தேதி தனது இடத்தை மாற்றவுள்ளார். பின்னர் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் சுக்கிரன் மகர ராசியில் இருந்து பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பின்னர் புதன் தனுசு ராசியிலிருந்து டிசம்பர் 29-ம் தேதி மகர ராசிக்குள் நுழைகிறார். அதன் பிறகு டிசம்பர் 30-ம் தேதி சுக்கிரன் பின்னோக்கி நகர்ந்து தனுசு ராசிக்கு திரும்புகிறார்.

மேஷம்
டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். குரு உங்கள் சுப வீட்டில் இருப்பதால், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் மனக்குழப்பம் குறையும். குரு சுப வீட்டில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களின் பல விருப்பங்கள் நிறைவேறும். இம்மாதத்தில் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கலாம்.

மிதுனம்
டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இம்மாதத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி விஷயத்தில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. பெற்றோருடனான உறவு மேம்படும். இம்மாதத்தில் மத பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில், உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடன் பிரச்சனை நீங்கும்.

சிம்மம்
இம்மாதம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்களைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனை மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். மேலும் இம்மாதம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நீங்கள் தீட்டும் திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். அதோடு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் மிகவும் பிஸியாக இருந்தாலும், செய்யும் வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள். இம்மாதத்தில் உங்கள் தைரியமும், பலமும் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் காதலை நன்கு வெளிப்படுத்துவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவார்கள். இம்மாதத்தில் புதிய தொழில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்பிற்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். எங்கேனும் முதலீடு செய்திருந்தால், அதில் அதிக லாபம் ஈட்ட வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களின் உடல்நிலை மேம்படும். சிலருக்கு நெருங்கிய உறவுகளின் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
