Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இதுல ஒரு விலங்கை சூஸ் பண்ணுங்க... உங்களோட இருண்ட பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...
ஒருவரின் விருப்பங்களைக் கொண்டு அவரது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும். குறிப்பாக விலங்குகளைக் கொண்டு ஒருவரது இருண்ட பக்கத்தை கூறலாம்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு கொண்டுள்ளன. ஒருவரின் குணாதிசயங்களை பலவாறு அறிந்து கொள்ளலாம். இந்த குணாதிசயங்களை கணிப்பதற்கு என்றே ஒரு தனி படிப்பு உள்ளது. அதில் ஒருவரின் விருப்பங்களைக் கொண்டு அவரது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியும். குறிப்பாக விலங்குகளைக் கொண்டு ஒருவரது இருண்ட பக்கத்தை கூறலாம். அந்த வகையில் கீழே ஒருசில விலங்குகளின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் உங்களுக்கு பிடித்த விலங்கை தேர்ந்தெடுத்து, அவற்றின் சொந்த ஆளுமையின் இருண்ட ரகசியம் என்னவென்பதை படியுங்கள். இச்சோதனை அர்த்தமுள்ள வழியில் நம்மை நாமே புரிந்து கொள்ள உதவுகின்றன. இப்போது விலங்குகளையும், அவை உண்மையில் என்ன அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்பதையும் படித்து பாருங்கள்.

கழுகு
கழுகுகள் பொதுவாக அதன் பலவீனமான இரையைக் கண்டுபிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து பின் வேட்டையாடும். நீங்கள் இந்த கழுகை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் மிகவும் பொறுமைசாலி. நீங்கள் சட்டென்று எதற்கும் கோபப்படமாட்டீர்கள். மாறாக அமைதியாக இருந்து பழிவாங்குவீர்கள். மறுபுறம், நீங்கள் உங்களுக்கு சரியான தருணம் கிட்டும் வரை பொறுத்திருந்து எதையும் செய்வீர்கள்.
8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

கருப்பு பூனை
கருப்பு பூனையை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் எப்போதும் கொஞ்சம் மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையாக இருப்பீர்கள். எப்போதும் உங்களை தனிமைப்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் மிகப்பெரிய வலிமை, எதையும் விரிவாக தெரிந்து கொள்ள கவனம் செலுத்துவீர்கள். இது தவிர, உங்களிடம் எதையும் ஒழுங்கமைப்பு செயல்படுத்துவதற்கான அற்புதமான திறன் உள்ளது.

கருப்பு நிற சிலந்தி
நீங்கள் கருப்பு நிற சிலந்தியை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் எதையும் அட்டகாசமாக கையாளுவீர்கள். எப்பேற்பட்டவரையும் சந்தேகமின்றி வஞ்சகத்தின் வலையில் சிக்க வைப்பதில் சிறந்தவர். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள் என்பதை உணராமல் இருப்பர்.

கருப்பு சிறுத்தை
நீங்கள் கருப்பு சிறுத்தையை தேர்ந்தெடுத்திருந்தால், மற்றவர்களை ஈர்க்கும் திறன் உங்களிடம் உள்ளது. இந்த வலிமையான விலங்கை தேர்ந்தெடுத்திருப்பவர்கள் கடுமையான மற்றும் வலிமைமிக்கவராக கருதப்படுகிறார்கள். இது உங்களைப் பற்றி அறியாதவர்களுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தலாம்.

காகம்
நீங்கள் காகத்தை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் புத்திசாலி மற்றும் மற்றவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளக்கூடியவர் மற்றும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் உங்களுக்கும் தெரியும். மற்றவர்களுடன் பழகும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். இது தவிர, உங்களுக்கென்று ஒரு ஆழமான மற்றும் தனிப்பட்ட பக்கம் உள்ளது.

வௌவால்
உங்களின் தேர்வு வௌவாலாக இருந்தால், நீங்கள் மிகவும் சிக்கலான ஆளுமையைக் கொண்டவர். உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் வழியில் வாழ விரும்புவீர்கள். இது தவிர, நீஙகள் மற்றவர்களை விட வித்தியாசமாக உலகைப் பார்க்கும் நபர். மறுபுறம், நீங்கள் தனித்துவமானவர் மற்றும் உலகில் உள்ள மற்றவர்களை விட எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்து நடப்பவர்.

ஓநாய்
நீங்கள் ஓநாயை தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர் மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். உங்களின் சொந்த பலம் உங்களுக்கு நன்கு தெரியும் மற்றும் உங்களின் செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நன்கு அறிவீர்கள். மறுபுறம், உங்கள் செயல்கள் வேகமாக இருக்கும் மற்றும் உங்கள் விசுவாசம் யாராலும் உடைக்க முடியாததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
