Latest Updates
-
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த ராசிக்காரங்களாம் கருப்பு கயிற்றை கையில் கட்டக்கூடாது.. கட்டுனா வாழ்வில் பிரச்சனை அதிகரிக்குமாம்..
கருப்பு நிற கயிறு அனைவருக்குமே ஏற்றது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிட சாஸ்திரத்தில் கூட சில ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கை, கால்களில் கட்டக்கூடாது என கூறப்படுகிறது.
நம் இந்திய நாட்டில் மக்களிடையே ஏராளமான நம்பிக்கைகள் உள்ளன. அதில் பெரும்பாலான மக்கள் தங்கள் கைகள் மற்றும் கால்களில் கருப்பு கயிற்றைக் கட்டியிருப்பதைக் காணலாம். சிலர் கழுத்தில் கூட கருப்பு கயிற்றினைக் கட்டுவார்கள். ஏனெனில் கருப்பு நிற கயிறு தீய சக்திகள் அண்டாமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. அதே வேளையில் கருப்பு கயிற்றினை கட்டியிருந்தால் கெட்ட சக்திகள் விலகி நிற்குமாம்.

ஆனால் அந்த கருப்பு நிற கயிறு அனைவருக்குமே ஏற்றது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிட சாஸ்திரத்தில் கூட சில ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கை, கால்களில் கட்டக்கூடாது என கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் வேறு எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டலாம் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் பகவானுக்கு கருப்பு நிறம் ஆகாது. இம்மாதிரியான சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மேஷ ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினைக் கைகளில் கட்டினால், ஏதாவது தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். மேஷ ராசிக்காரர்களைப் போன்றே விருச்சிக ராசிக்காரர்களும் கருப்பு நிற கயிற்றை கை, கால்களில் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவேளை இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினைக் கட்டினால், செவ்வாய் பகவானால் கிடைக்கும் நற்பலன்கள் தடைபட்டு, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்போது கருப்பு கயிற்றினை எந்த ராசிக்காரர்கள் அணியலாம் என்பதைக் காண்போம்.

கருப்பு கயிற்றினை எந்த ராசிக்காரர்கள் அணியலாம்?
துலாம்
துலாம் ராசி என்பது சனி பகவானின் உயர்ந்த அடையாளமாகும். கருப்பு நிறம் சனி பகவானுக்கு உரிய நிறம். ஆகவே துலாம் ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிற்றினை கைகளில் கட்டுவது நல்லதாக கருதப்படுகிறது. இதனால் வறுமை நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானை அதிபதியாக கொண்டிருப்பதால் மகர ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கட்டுவது மங்களகரமானதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றினை கையிலோ, காலிலோ கட்டினால், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருரும்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் என்பதால் கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் கருப்பு கயிற்றினை கை, கால்களில் கட்டுவது நல்லது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சந்தோஷமாகவும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
