Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
பெனும்பிரல் சந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
பெரும்பாலும் சந்திர கிரகணம் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். ஜூலை 5 ஆம் தேதி வரக்கூடிய சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும்
இதுவரை 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரண்டு சந்திர கிரகணங்களும், ஒரு சூரிய கிரகணமும் காணப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இரண்டாம் பாதி தொடக்கத்தில், அதாவது ஜூலை 5 ஆம் தேதி மற்றொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த பெனும்பிரல் சந்திர கிரகணத்தை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது.

பெரும்பாலும் சந்திர கிரகணம் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். ஜூலை 5 ஆம் தேதி வரக்கூடிய சந்திர கிரகணம் பெனும்பிரல் என்னும் தெளிவற்ற சந்திர கிரகணமாக காட்சியளிக்கும். ஏனெனில் பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது, சூரியன், சந்திரனுக்கு இடையே வரும் பூமி முழுவதுமாக மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் சந்திரன் மீது விழுவதால், அது தெளிவற்று இருண்டதாக தெரியும்.
பொதுவாக சந்திர கிரகணம் நிகழ்ந்தால், அது ஜோதிடத்தில் உள்ள ராசிகளின் மீது தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் ஜூலை 5 ஆம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தால் மோசமான தாக்கத்தை சந்திக்கவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

பெனும்பிரல் கிரகணத்தின் நேரம் மற்றும் காலம்:
இந்தியாவில் பெனும்பிரல் சந்திர கிரகண தொடக்கம் - காலை 8.38 மணிக்கு
அதிகபட்ச கிரகணம் - காலை 9.59 மணிக்கு
கிரகணம் முடிவு - காலை 11.21 மணிக்கு

பெனும்பிரல் சந்திர கிரகணத்தினால் எதிர்மறை விளைவை சந்திக்கவிருக்கும் ராசிகள்:
பொதுவாக இந்த வகையான கிரகணம் வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், நம் வாழ்வில் சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதில் இவை முக்கிய பங்கை வகிக்கின்றன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, பெனும்பிரல் சந்திர கிரகணம் 4 ராசிக்காரர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்றும், எம்மாதிரியான தாக்கங்களை சந்திப்பார்கள் என்றும் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில், சமூக நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே மன ஆரோக்கியத்திலும் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக கடந்த காலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்
ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பெனும்பிரல் சந்திர கிரகணம், உங்கள் ஜாதகத்தின் மூன்றாம் வீட்டை நேரடியாக பாதிப்பதால், மத செயல்பாட்டில் உங்கள் ஆர்வம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். தினமும் காலையில் 10-15 நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். முக்கியமாக வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

விருச்சிகம்
பெனும்பிரல் சந்திர கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் பாதிப்பதால், இந்த ராசிக்காரர்கள் விபத்துக்களால் ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கலாம். நிதி நிலைமை பற்றி பேசுவதானால், பணம் வந்த வேகத்தில் கையை விட்டு போகும். பணியிடத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண முயற்சி செய்யுங்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக திட்டங்களைத் தீட்டலாம். எனவே எப்போதும் கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள், ஆறு மாதங்களுக்கும் மேலாக சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்களது தொழில் மற்றும் வேலையில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும். காதல் செய்பவர்கள், துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
