Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
ஆகஸ்ட் 14 ஆம் தேதியை தேச பிரிவினையின் நினைவு தினமாக அறிவித்த பிரதமர் மோடி!
மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தேச பிரிவினையின் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அறிவித்தார்.
மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தேச பிரிவினையின் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அறிவித்தார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், பிரிவினையால் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்ததோடு, பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இந்த தேச பிரிவினை நினைவு தினமானது, சமூக பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகிய இரண்டு நச்சுக்களையும் நீக்கி, சமூக ஒற்றுமை மற்றும் மனித வலுவூட்டல் ஆகிய உணர்வுகளை மேம்படுத்த வேண்டியது அவசியத்தை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கட்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிந்த பிறகு பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடாக செதுக்கப்பட்டது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரிய கலவரத்தால் உயிரிழந்தனர். இந்த வருடம் இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடவுள்ளது.
இந்தியா பிரிட்டிஷ்ஷிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. 74 ஆண்டுகள் பழமையான இந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றிய வரலாற்றில் உள்ள சில முக்கிய துளிகளைக் காண்போம்.

வரலாறு
1885 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரிட்டிஷ் ஆட்சியில் வாழும் இந்திய மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 1905 இல் இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற குரல் ஓங்கியது. 1906 இல் இந்திய முஸ்லீம்களின் அதிகாரத்தைப் பாதுகாக்க முதன் முதலாக முஸ்லீம் லீக் உருவானது. 1938 ஆம் ஆண்டு இந்து-முஸ்லீம் மக்களிடையே உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மகாத்மா காந்திக்கும், முகம்மது ஜின்னாவுக்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் அப்பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பாகிஸ்தான் தீர்மானம்
1940 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவாக ஆரம்பமானது. இந்த ஆண்டு தான் முஸ்லீம்களுக்கு என்று முழுமையான சுதந்திரமான நாடு வேண்டும் என்று வெளிப்படையாக கேட்கப்பட்டது. இதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது. இப்பிரச்சனையைத் தீர்க்க பிரிட்டன் பிரதம மந்திரி தீர்க்க முயன்றார். ஆனால் அது ஒத்துப்போகவில்லை. 1942 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் ஆங்கிலேயரை வெளியேற்ற 'வெள்ளையே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டது.
1944 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியும், முகம்மது ஜின்னாவும் பாகிஸ்தான் குறித்து நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தன. இதனால் கருத்து வேறுபாடுகள் ஆழமாயின. பாகிஸ்தான் உருவான பின்னரே சுதந்திரம் என்று ஜின்னா கூற, சுந்திரத்திற்கே முன்னுரிமை என்று காந்தி கூறினார்.

மிகப்பெரிய கலவரம்
1946 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையின் போது, முஸ்லீம் லீக் விலகி போராட்டங்களைத் தொடங்கின. அதன்பின் நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டன. கலவரங்கள் பெரிய வன்முறையாக மாறியது. அதில் சுமார் 4000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக பிரிட்டன் பிரதம மந்திரி அறிவித்தார். ஆனால் லார்ட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயாக பதவியில் இருப்பார் என்றும் கூறினார். அதன் பின் மவுண்ட்பேட்டன் இந்திய கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென காந்தியும், ஜின்னாவும் கோரிக்கை விடுத்தனர். ஜூன் 2 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரிவினை திட்டத்தை இந்திய தலைவர்களிடம் கூறினார். மறுநாள் இந்த பிரிவினை திட்டம் குறித்து மக்களுக்கு ரோடியோவில் கூறினர். இறுதியாக 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் என்ற புதிய நாடு உருவானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகார பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது.



Click it and Unblock the Notifications
