For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Parsi New Year 2021 பார்சி புத்தாண்டு குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

இந்தியாவில் பார்சி புத்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நவ்ரோஸ் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

|

பார்சி புத்தாண்டு என்பது ஜோராஸ்ட்ரியன் நாட்காட்டியின் முதல் மாதமான ஃபார்வர்டின் முதல் நாளில் கடைபிடிக்கப்படும் ஒரு பண்டிகை. இது நவ்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெயர் பாரசீக சொற்களான நவ் மற்றும் ரோஸிலிருந்து பெறப்பட்டது. இது ஒரு 'புதிய நாளை' குறிக்கிறது. இந்த கொண்டாட்டமானது உலகளவில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலத்தில் வரும்.

ஆனால் இந்தியாவில் உள்ள பார்சி சமூக மக்கள் ஷாஹன்ஷாஹி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றனர். இதில் லீப் ஆண்டுகள் கணக்கிடப்படுவதில்லை. எனவே இந்த கொண்டாட்டமானது, இதன் அசல் தேதியில் இருந்து 200 நாட்களுக்கு பின் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்தியாவில் பார்சி புத்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நவ்ரோஸ் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்சி புத்தாண்டு வரலாறு மற்றும் முக்கியத்துவம்

பார்சி புத்தாண்டு வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஜோராஸ்ட்ரியனிசம் என்பது உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றாகும். இது 3,500 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ஈரானில் இறைதூதர் ஜரதுசரால் உருவாக்கப்பட்டது. இது கிமு 650 முதல் 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றிய வரை பெர்சியாவின் (இப்போது ஈரான்) அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. மேலும் இது 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய உலகில் மிக முக்கியமான சமயங்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் பார்சி மக்கள்

இந்தியாவில் பார்சி மக்கள்

இஸ்லாமிய படைகள் பெர்சியா மீது படையெடுத்த போது, ஏராளமான ஜோராஸ்ட்ரியர்கள் இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பார்சிகள் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய குழுவாகும். உலகளவில் சுமார் 2.6 மில்லியன் ஜோராஸ்ட்ரியர்கள் உள்ளனர்.

பார்சி புத்தாண்டைக் கொண்டாட ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஜோராஸ்ட்ரியர்களால் ஃபாஸ்லி/பஸ்தாய் நாட்காட்டியை பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் ஜோராஸ்ட்ரியர்கள் அல்ல என்ற போதிலும், இப்பகுதியில் உள்ள பல மக்களும், அவர்களின் கலாச்சாரங்களும் நவ்ரோஸை ஒரு பிரபலமான பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

பார்சி புத்தாண்டு எப்படி கொண்டாடப்படுகிறது?

பார்சி புத்தாண்டு எப்படி கொண்டாடப்படுகிறது?

பார்சி புத்தாண்டின் போது பார்சிகள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, மலர்கள் மற்றும் கண்கவர் ரங்கோலிகளால் அலங்கரித்து, விருந்தினர்களை அழைப்பார்கள். மேலும் இந்த சமூக மக்கள் காலை உணவுக்கு பின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு தீ கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். அப்போது நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக ஜஷான் என்ற பிராத்தனையை செய்கிறார்கள். மேலும் அந்த புனித நெருப்பிற்கு முன் பிரசாதமாக பால், தண்ணீர், பழங்கள், பூக்கள் மற்றம் சந்தனம் ஆகியவற்றை வழங்குவார்கள்.

நவ்ரோஸ் பண்டிகையின் போது பார்சி மக்கள் தங்கள் வீடுகளில் மதிய விருந்தின் போது, பிரான் பாட்டியோ, மோரி தார், பத்ரா நி மச்சி, ஹலீம், அக்கூரி, ஃபலூடா, அம்பகல்யா, தன்சாக், ராவோ, சாலி போடி, குங்குமப்பூ புலாவ் ஆகியவற்றை செய்வார்கள். மேலும் இந்நாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை ரோஸ் வாட்டர் தெளித்து வரவேற்பார்கள் மற்றும் அவர்களுக்கு ஃபலூடாவைக் கொடுப்பார்கள். கூடுதலாக, சிலர் பார்சி புத்தாண்டின் போது நன்கொடைகளையும் வழங்குவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parsi New Year 2021: Date, History, Significance and All You Need to Know about Navroz In Tamil

Parsi New Year 2021: Date, History, Significance and All You Need to Know about Navroz In Tamil. Read on...
Desktop Bottom Promotion