Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ராசிப்படி புத்தாண்டில் இத செஞ்சா.. லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகும்.. ஆசையும் நிறைவேறும்..
ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டும் மற்றும் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும். அதற்கு ராசிப்படி புத்தாண்டில் சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். வரக்கூடிய 2023 ஆம் ஆண்டு செழிப்பாக இருக்க வேண்டும் மற்றும் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று அனைவருமே விரும்புவோம். ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் ராசியை மாற்றுவதால், அதன் விளைவாக சில யோகங்களும் உருவாகவுள்ளன. இவை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே வேளையில், ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டும் மற்றும் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும். அதற்கு ராசிப்படி வரக்கூடிய புத்தாண்டில் சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைப்பதோடு, பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். இப்போது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய். எனவே இவ்விரு ராசிக்காரர்களும் வரக்கூடிய புத்தாண்டில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், பருப்பு வகைகளை தானம் வழங்க வேண்டும். மேலும் தினமும் குளிக்கும் போது சிறிது சிவப்பு சந்தனப் பொடியை குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதனால், லட்சுமி தேவியின் அருளால் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி சுக்கிரன். எனவே இவ்விரு ராசிக்காரர்களும் வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து பசுவிற்கு வழங்க வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் பறவைகளுக்கு தானியங்களை உணவளிக்க வேண்டும். இது தவிர, குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ஏலக்காய் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து குளிக்க வேண்டும். இதனால் நல்ல பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம் மற்றும் கன்னி
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி புதன். இந்த இரண்டு ராசிக்காரர்களும் புதன்கிழமைகளில் பறவைகள் மற்றும் பசுக்களுக்கு உணவளிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் 'ஓம் கணபதயே நமஹ' என்னும் மந்திரத்தையும், விஷ்ணு சகஹ்ரநாமம் மற்றும் குரு மந்திரங்களை சொல்ல வேண்டும்.

கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து, "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்தி புஷ்டிவர்தனம் உர்வருகமிவ் பந்தனாநாமர்தோ ம்ர்க்ஷிய மாம்ரிதா" என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். இது தவிர ஒவ்வொரு பௌர்ணமியும் சந்திரனுக்கு நீரை வழங்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியனை வணங்குவதோடு, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும், பறவைகளுக்கு கோதுமையை உணவளிக்க வேண்டும். இது தவிர ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யலாம்.

தனுசு மற்றும் மீனம்
தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி குரு. எனவே இவ்விரு ராசிக்காரங்களும் தங்களின் குருக்களை மதிக்க வேண்டும். பெற்றோரிடம் எப்போதும் மரியாதையின்றி நடக்காதீர்கள் மற்றும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். மேலும் வியாழக்கிழமை அன்று கொண்டைக்கடலை மாலையை குரு பகவானுக்கு அணிவித்து, நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி சனி. இவ்விரு ராசிக்காரர்களும் தினமும் காலையில் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமி தேவிக்கு ரோஜாவை அர்ப்பணித்து வழிபட வேண்டும். இதனால் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications