Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
மறந்தும் இந்த பொருட்களை மற்றவர்களிடம் கடனா வாங்காதீங்க.. இல்ல இழப்பை சந்திப்பீங்க..
தெரியாமல் ஒருசில பொருட்களை கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது ஒரு நபருக்கு துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என ஜோதிடம் கூறுகிறது. இப்போது எந்த பொருட்களை ஒருவர் தெரியாமல் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
தங்களிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்ல பழக்கம் தான். மற்றவர்களுக்கு தங்களிடம் உள்ள பொருட்களை கடனாக கொடுப்பது, ஒருவரின் அன்பின் மனப்பான்மை வெளிக்காட்டுகிறது. ஆனால் சில பொருட்களை பகிர்ந்து கொள்வது ஒருவரின் அதிர்ஷ்டத்தையும், கடன் வாங்குபவரின் அதிர்ஷ்டத்தையும் பாதிக்கும் என்பது தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் தாங்கள் பயன்படுத்தும் பேனா, கைக்கடிகாரம், கைக்குட்டை போன்றவற்றை கடனாக கொடுத்து வாங்குவோம். ஆனால் இவையெல்லாம் ஒருவரின் அதிர்ஷ்டத்தை பாதிக்கும் எதிர்மறை ஆற்றலை கொண்டிருப்பது பற்றி நமக்கு தெரியாது. தெரியாமல் ஒருசில பொருட்களை கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது ஒரு நபருக்கு துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என ஜோதிடம் கூறுகிறது. இப்போது எந்த பொருட்களை ஒருவர் தெரியாமல் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம். ஒருவேளை பகிர்ந்தால், அவை ஆரோக்கிய பிரச்சனைகள், நிதியில் உறுதியற்ற தன்மை மற்றும் பல பெரிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கலாம்.

பேனா
ஜோதிடத்தின் படி, யாருக்கும் பேனாவை கடனாக கொடுக்கவோ அல்லது கடனாக வாங்கவோ கூடாது. ஏனெனில் வேறொருவரின் பேனாவை வாங்கி பயன்படுத்தினால், அது நிதியில் நிலையற்ற தன்மையைக் கொண்டு வரும். அதேப் போல் நீங்கள் உங்கள் பேனாவை மற்றவருக்கு தானமாக அல்லது கடனாக கொடுக்கும் போது, நீங்கள் உங்கள் கர்மாவை மற்றவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

கைக்கடிகாரம்
ஜோதிட நம்பிக்கைகளின் படி, எப்போதும் மற்றவரின் கைக்கடிகாரத்தை அணியக்கூடாது. வேறொருவரின் கைக்கடிகாரத்தை அணிவது ஒருவரின் தொழில் வாழ்க்கையை பாதிப்பதோடு, நிதி இழப்பையும் ஏற்படுத்தும். எனவே நிலையான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பினால், உங்களின் கைக்கடிகாரத்தை மற்றவர்களுக்க கொடுக்கவோ அல்லது மற்றவர்களின் கைக்கடிகாரத்தை வாங்கி அணியவோ செய்யாதீர்கள்.

திருமணத்திற்காக பணம் வாங்குவது
ஜோதிட நம்பிக்கைகளின் படி, திருமணம் செய்ய நினைப்பவர்கள், எப்போதும் தங்கள் திருமணத்திற்கு அல்லது நடத்தும் திருமணத்திற்கு எப்போதும் பணத்தை கடன் வாங்கி செய்யக்கூடாது. ஏனெனில் கடனுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்குவது மோசமானதாகக் கருதப்படுகிறது என்று ஜோதிடம் நம்புகிறது. எனவே இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

புத்தகம்
நீங்கள் படிக்கும் புத்தகத்தை யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. உங்கள் நண்பர் நீங்கள் படிக்கும் அதே புத்தகத்தை கேட்டால், அவருக்கு நீங்கள் பயன்படுத்தும் புத்தகத்தைக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு புதிய புத்தகத்தை வாங்கலாம். ஆனால் உங்கள் அறிவுக்காக நீங்கள் பயன்படுத்தும் விஷயங்களை ஒருபோதும் பகிரவோ அல்லது நன்கொடையாகவோ கொடுக்க வேண்டாம்.

பயன்படுத்திய ஆடைகள்
மற்றவர்களின் ஆடையை உடுத்தும் பழக்கம் உள்ளதா அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆடையை கடன் வாங்கும் பழக்கம் இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜோதிடத்தின் படி, மற்றவர்களிடம் ஆடைகளை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். ஆடைகள் சுக்கிரனுடன் தொடர்புடையவை. மற்றவரின் ஆடைகளை அணிவது உங்கள் சுக்கிரனை வலுவிழக்கச் செய்யும் என ஜோதிடம் கூறுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications