Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா?
Navratri 2023: துர்கா தேவியின் ஒவ்வொரு அவதாரங்களையும் போற்றி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் நவராத்திரி பண்டிகை. அந்த வகையில் ஒன்பதாவது நாளான கடைசி நாளன்று துர்கா தேவியின் சித்திதாத்ரி அவதாரத்தை பக்தர்கள் வழிபடுவார்கள்.
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாள் தான் மகா நவமி என்னும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் துர்காவின் சித்திதாத்ரி வடிவம் வழிபடப்படுகிறது. சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் அர்த்தம். அதாவது அனைத்து சக்திகளையும் தருபவள் தான் சித்திதாத்ரி தேவி.

இப்போது நவராத்திரியின் கடைசி நாளன்று சித்திதாத்ரி தேவியின் வடிவம், வழிபடும் முறை, அவருக்கான மந்திரம் மற்றும் எந்த நேரத்தில் பூஜை செய்வது நல்லது போன்றவற்றைக் குறித்து விரிவாக காண்போம்.

சித்திதாத்ரி தேவியின் வடிவம்
தேவி சித்திதாத்ரி சிவப்பு நிற புடவை அணிந்து, தாமரை மலரில் அமர்ந்து இருப்பார். நான்கு கைகளுடன் இருப்பார். அதில் இடது கையில் கதை மற்றும் சக்கரம் கொண்டும், வலது கையில் தாமரை மற்றும் சங்கு ஏந்தியும் இருப்பார். சித்திதாத்ரி தேவியின் வாகனம் சிங்கம்.
சொல்லப்போனால் சிவபெருமான் துர்கா தேவியின் இந்த வடிவத்தை தான் வழிபாடு செய்து அனைத்து சக்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என்று தேவி புராணம் கூறுகிறது.

நவராத்திரி நவமி திதி நேரம்
மகா நவமி திதி அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 7.59 மணிக்கு தொடங்கி, அக்டோடர் 23 மாலை 5.45 மணிக்கு முடிவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளன்று ஊதா நிற உடை அணிந்து, சித்திதாத்ரி அம்மனுக்கு ஊதா நிற ஆடை உடுத்தி வழிபட்டால், அவரது அருள் கிடைக்கும்.

சித்திதாத்ரி பூஜை முறைகள்
நவராத்திரியின் எட்டு நாட்கள் முறையாக பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று சித்திதாத்ரி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டால், மனதில் இருக்கும் ஐயம் நீங்குவதோடு, பேரானந்தத்தை அனுபவிக்கக்கூடும்.
* சித்திதாத்ரி தேவிக்கு பூஜை செய்ய ஆரம்பிக்கும் போது, முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். இதனால் பூஜையை எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக முடிக்க முடியும்.
* அதன் பின் சித்திதாத்ரி தேவிக்கான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
* பின்பு கந்தம், பூ, தீபம், சுகந்தம், நிவேத்யம் ஆகியவற்றைக் கொண்டு பஞ்சோபச்சார பூஜை செய்ய வேண்டும்.
* சித்திதாத்ரி தேவிக்கு பிடித்த கீர்/பாயாசம் மற்றும் பஞ்சாமிர்தத்தை நிவேத்தியம் செய்யுங்கள்.
* இறுதியில் கற்பூரம் காண்பித்து, மனதார சித்திதாத்ரி தேவியை வேண்டி வணங்குங்கள்.
* அதன் பின் தேவிக்கு படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சித்திதாத்ரி தேவிக்கான பூஜை மந்திரம்
"ஓம் தேவி சித்திதத்ராய் நம"
சித்த காந்தர்வ யக்ஷத்யிரசுரீராமாரைரபி |
சேவ்யமன சதா பூயாத் சித்திதா சித்தாய்தினி ||
யா தேவி சர்வபுதேஷு மா சித்திதத்ரி ரூபேனா சம்ஷ்டிதா |
நமஸ்தஸ்ஸாய் நமஸ்தாசாய் நமஸ்தாசாய் நமோ நம ||



Click it and Unblock the Notifications