Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நவராத்திரி ஏழாம் நாளில் காளராத்திரி தேவியின் அருளைப் பெற இந்த மந்திரத்தை சொல்லுங்க...
Navratri 2023: நவராத்திரி என்பது துர்கா தேவியைப் போற்றும் விதமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் போற்றி வணங்கப்படுகிறது.
அந்த வகையில் ஏழாவது நாளாக துர்கையின் காளராத்திரி வடிவம் வழிபடப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமான ரூபம் காளராத்திரி. இதில் காள என்றால் நேரம், மரணம் மற்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும்.

துர்கை அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். இப்போது நவராத்திரியின் ஏழாவது நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியை வழிபடும் நேரம், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் என்னவென்று காண்போம்.

காளராத்திரி தேவியின் வடிவம்
காளராத்திரி தேவி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆக்ரோஷமான ரூபத்தில் இருப்பவர். மேலும் இவரது தேகம் கருமை நிறத்தில் இருக்கும். இவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, நான்கு கரங்களைக் கொண்டிருப்பார். இவரது ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மற்றொரு கரத்தில் வாளும் இருக்கும். எஞ்சிய இரண்டு கரங்கள் பக்தர்களுக்கு அபயத்தை வழங்கும். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

பூஜை முறைகள்
* அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.
* பூஜை அறையில் காளராத்திரி தேவியை வைக்கவும்.
* தேவியை பூக்களால் அலங்கரித்து, ஊதுபத்தியை ஏற்ற வேண்டும்.
* பின் ஒரு கலசத்தை எடுத்து, அதை அரிசியால் நிரப்பி, சுற்றி மாவிலைகளை வைத்து, மேலே தேங்காயை வைக்க வேண்டும்.
* அடுத்து விளக்கை ஏற்றி, தேவிக்கான மந்திரத்தைக் கூறி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

காளராத்திரி தேவிக்கான மந்திரம்
"வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி"

காளராத்திரி தேவிக்கான பிரசாதம்
நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியைப் பிரியப்படுத்த, அவருக்கு விருப்பமான வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்த பலகாரங்களைப் படையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவி காளராத்திரி உங்களின் வறுமையை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவார்.



Click it and Unblock the Notifications
