For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவகிரகதோஷங்கள் நீக்கும் நவராத்திரி: பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரதம் இருக்கலாம்

நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களும் விரதம் இருந்து பண்டிகையை கொண்டாடினால் அனைத்து சக்திகளும் கிடைக்கும்.

|

சர்வமும் சக்தி மயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி பண்டிகை கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. நம் வீட்டில் கொலு வைத்து வணங்கினால் அனைத்து அம்சங்களுடன் அம்பிகை அந்த வீட்டில் எழுந்தருளுவார். நவம் என்றால் ஒன்பது நவராத்திரி பண்டிகை கொண்டாடினால் உடம்பிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும். நவராத்திரியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரதம் இருந்த கொண்டாடினால் நோய் நொடிகள் தீரும் சக்தி அதிகரிக்கும்.

நவராத்திரி பண்டிகை நான்கு காலங்களில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வாராஹி நவாராத்திரி என அழைக்கப்படும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவாராத்திரி என அழைக்கப்படும். தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவாராத்திரி என அழைக்கப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவாராத்திரி என அழைக்கப்படும்.

Navratri

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் வெயில், மழையினால் நோய்கள் அதிகரிக்கும். இந்த நோயிலிருந்த காப்பதற்காகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி பண்டிகைதான் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லட்சுமியின் அவதாரம்

லட்சுமியின் அவதாரம்

நவராத்திரி பண்டிகை பற்றி பல்வேறு புராண கதைகள் சொல்லப்படுகின்றன. புரட்டாசியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சீனிவாச பெருமாளை அடைவதற்காக மகாலட்சுமி தாயார் அலமேலுமங்கை என்ற திருநாமத்துடன் எழுந்தருளினார். பெருமாளை அடைவதற்காக அவர் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானை அடைந்தார். இதன்காரணமாகவே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

MOST READ: சொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?

முப்பெரும் தேவியர்

முப்பெரும் தேவியர்

புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை வட மாநிலங்களில் துர்கா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். புதன் கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதி. புத்திக்கு உரியவர். கல்வி, செல்வம், வீரத்திற்காக கலைமகள், மலைமகள், அலைமகளை வணங்குகிறோம். விஜயதசமி நாட்களில் நாம் கல்வி, கலைகளை பயில தொடங்குகிறோம்.

நவகிரகதோஷம் நீங்கும்

நவகிரகதோஷம் நீங்கும்

பிரதமை துவங்கி தசமி வரை நவராத்திரி பண்டிகை நாட்களில் விரதம் இருந்து முப்பெரும் தேவியரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகங்களினால் நன்மைகளும் நடைபெறும்.

நவராத்திரியால் நன்மைகள்

நவராத்திரியால் நன்மைகள்

நவராத்திரி பண்டிகை விரதம் கடைபிடித்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு வீரம், செல்வம், கல்வி போன்றவை கிடைக்கும். விரும்பிய பலனை பெறலாம். இந்த விரதம் அனுஷ்டித்த இந்திரன் விருத்திராசுரனை அழித்தான் என்கிறது புராணம்.

MOST READ: மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா?... படிங்க புரியும்...

மாங்கல்ய பலன் கிடைக்கும்

மாங்கல்ய பலன் கிடைக்கும்

இந்த விரதம் மேற்கொள்ளம் கன்னிப்பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும். சுமங்கலி பெண்களுக்கு நவராத்திரி பண்டிகை நாட்களில் மங்கல பொருட்களை தானம் கொடுக்க நன்மைகள் நடக்கும்.

ஆண்களும் வழிபடலாம்

ஆண்களும் வழிபடலாம்

சிவனுக்கு சிவராத்திரி நவராத்திரி ஒன்பது நாட்கள் அம்மனுக்காக சக்திக்காக கொண்டாடப்படும் பண்டிகை. ஒன்பது நாட்கள் இது கொலு வைத்து கொண்டாடப்படும் பண்டிகை. இது பெண்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை அல்ல. ஆண்களும் விரதம் இருந்து கொண்டாடலாம். இதனால் சக்தியும் அதிகரிக்கும். காரணம் அசுரனை அழிக்க அனைத்து சக்திகளும் ஆண் தெய்வங்களின் மூலம் உருவானவர்கள்தான்.

நவ சக்திகள்

நவ சக்திகள்

பிரம்மனின் மூலம் உருவான பிராஹ்மணி, சிவன் மூலம் உருவான மகேஸ்வரி, விஷ்ணுவிடம் இருந்து உருவான வைஷ்ணவி, முருகனிடம் இருந்து உருவான கவுமாரி, வராக மூர்தியிடம் இருந்து உருவான வாராஹி, நரசிம்மர் மூலம் உருவான நரசிம்ஹி, இந்திரன் மூலம் உருவான இந்திராணி என அனைத்து சக்தி ரூபாங்களும் ஆண் தெய்வங்களின் மூலம் சக்திகளையும் ஆயுதங்களையும் பெற்று அசுரனை எதிர்த்து போரிட்டு அசுர வதம் செய்தனர். எனவே இந்த பண்டிகையை ஆண்களும் கொண்டாடலாம். விரதம் இருந்து பண்டிகை கொண்டாட சக்தி கிடைக்கும்.

MOST READ: இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

நோய்கள் நீங்கும்

நோய்கள் நீங்கும்

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். எட்டாம் நாளன்று துர்க்காஷ்டமி நாளிலும் நவமி நாளான சரஸ்வதி பூஜை நாளிலும் அம்பிகையை வணங்கி அவரது கதையை கேட்பவர்களுக்கு அம்மை நோய் தாக்காது என்பது நம்பிக்கை. பிரிந்த உறவுகள் ஒற்றுமை அடைவார்கள். நெருப்பு, ஆயுதங்களினால் ஏற்படும் கண்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை. சக்தியை வழங்கும் அம்பிகையை இந்த நவராத்திரி நாளில் வணங்குவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: Nine holy nights for Nine Planets

Navratri celebration for Goddess Durga, Laksmi and Saraswathi Nine holy nights for Nine Planets,Be it the nine planets Navagruhas, the nine gates or openings in us Navadwaras, nine forms of devotion Navabhakti or the nine aesthetic emotions Navarasas, it’s a joyous celebration of the spirit
Desktop Bottom Promotion