For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக தோஷம் இருக்கா? இந்த தேதியில் பிறந்தவங்க கண்களுக்கு அடிக்கடி பாம்பு தெரியுதே ஏன்?

நாகதோஷம், கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணம் நடப்பதிலோ, புத்திரபாக்கியம் கிடைப்பதிலோ பாதிப்புகள் ஏற்படும். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் நீங்கி திருமணமும் குழந்தை

|

பாம்புகள் சிலருடைய கண்களுக்கு மட்டும் அடிக்கடி தென்படும். குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்களின் கண்களுக்கு அடிக்கடி நாகங்கள் தென்படும் அவர்களுக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று ஜாதகத்தில் பார்க்க வேண்டும். சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பாம்புகளால் பாதிப்பு ஏற்படும். திருமணம் செய்வதில் தடையும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதமும் ஏற்படும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கும்.

Naga Dosham Myth And Facts And Remedies

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களில் ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. சிலரது ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களுக்கு இடையே சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்கள் சிக்கிக்கொண்டிருக்கும். இது கால சர்ப்ப தோஷமுடைய ஜாதகமாகும். கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் தினமும் படிக்க வேண்டும்.

புராண காலங்களில் ஒருவர் சன்னியாசம் வாங்கப் போகும் போது அவர்களுக்கு நாகதோஷம் இருக்கிறதா என்று பார்த்தனர். காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பார்த்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. இப்போது திருமணம் செய்யும் போது ஆணுக்கோ பெண்ணுக்கோ நாகதோஷம் இருக்கிறதா? கால சர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று பார்த்துதான் திருமணம் செய்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் கண்களுக்கு பாம்பு தெரியும்

யார் கண்களுக்கு பாம்பு தெரியும்

ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். அதே நேரத்தில் நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

கணவருக்கு கண்டம்

கணவருக்கு கண்டம்

பாம்புகள் பழிவாங்கும் என்பது பற்றி பல சினிமாக்கள், டிவி சீரியல்கள் வந்து விட்டன. நாகதோஷம் ஒருவருக்கு எப்படி வருகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று தோஷத்தை எற்படுத்தும். இது கணவருக்கு கண்டத்தை கொடுக்கும்.

குழந்தை பிறப்பதில் தாமதம்

குழந்தை பிறப்பதில் தாமதம்

பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

வேலை செய்வதில் தோஷம்

வேலை செய்வதில் தோஷம்

பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

நாக தோஷம் பரிகாரம்

நாக தோஷம் பரிகாரம்

சர்ப்ப பரிகாரங்கள் செய்யும் போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும். அதேபோல கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.

நாகதோஷம் நீங்கும்

நாகதோஷம் நீங்கும்

இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து வணங்கினால் நாகதோஷம் விலகும். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.

48 நாட்கள் பரிகாரம்

48 நாட்கள் பரிகாரம்

ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்யலாம்.

மரணபயம் நீங்கும்

மரணபயம் நீங்கும்

கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகரை வணங்கலாம். 11 நாட்கள் அரசு, வேம்பு மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை வலம் வரலாம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு தேன் அபிஷேகமும், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு பால், மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் செய்து வழிபட்டால் நாகதோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Naga Dosham Myth And Facts And Remedies

Here we have Naga dosham pariharam.Rahu and Ketu snake planets surround every other planet in your birth chart, it gives rise to the term Kala Sarpa Dosha.
Story first published: Wednesday, March 11, 2020, 18:02 [IST]
Desktop Bottom Promotion