Latest Updates
-
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
ஒரு டம்ளருக்குள் இவ்வளவு வாழ்க்கை ரகசியம் இருக்கா?... இத படிங்க எல்லா தெரியும்...
குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய சூப்பரான மோட்டிவேஷனல் கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படித்து நீங்களும் மகிழ்ச்சி அடையுங்கள்.
இந்த டம்ளரோட வெயிட் என்னன்னு கண்டுபிடிச்சா உங்க வாழ்க்கைல இருக்கிற எல்லா பிரச்னையும் தீர்ந்திடுமாம்... அதெப்படி? இதோ இந்த தொகுப்பின் வழியே தெரிந்து கொள்ளலாம்.
பிரச்னை இல்லாத மனிதனே கிடையாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நம்முடைய மனம், ஏன் தான் எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்குதோ என்று புலம்வோம்.

அப்படி பிரச்னை எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதை எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் இருக்கிறது நம்முடைய மனம் அமைதியடைவதும், பிரச்னைக்கு தீர்வு உண்டாவதும் தான். ஒரு டம்ளரை வைத்து நம்முடைய வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றி எப்படி தெரிந்து கொள்ளலாம்.

மோட்டிவேஷனல் கதை
ஒருவர் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டு, தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை மிக எளிதாக எதிர்கொண்டு, வெற்றியை நோக்கிப் பயணிக்கவும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு வாழ்வதற்கும் ஒருவருக்கு வலிமை கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிற விஷயம் ஊக்குவித்தல் தான். ஊக்குவித்தல் கதைகளைக் கேட்கக் கேட்க நம்முடைய மனது உற்சாகமடையும். அப்படியொரு உற்சாகமான, சூப்பர் மோட்டிவேஷனல் கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

டம்ளரை கையிலெடுங்கள்
எவ்வளவு பெரிய பிரச்னை உங்களுக்கு இருந்தாலும் இந்த கதையில் வரும், உங்கள் வீட்டில் உள்ள ஒரு டம்ளரை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டம்ளர் வேண்டாம். அது மற்ற எவர்சில்வர், பித்தளை, வெள்ளி என ஏதாவது ஒரு உலோகதத்தால் டம்ளரின் எடையைக் கண்டுபிடித்துவிட்டீர் என்றால் நிச்சயம் உங்கள் பிரச்னைகள் அத்தனைக்கும் விடை கண்டுபிடித்துவிடலாம்.

எடையை கண்டுபிடிங்க
உங்கள் கையில் ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடைய எடையை அளந்து எதுவும் பார்க்காமல் அதனுடைய எடையக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உடல், மனம் இரண்டையும் ஒருமுகப்படுத்தி எடையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

வாத்தியார் கேட்ட கேள்வி
ஒரு வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?" என்று கேட்டார்.
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"
வாத்தியார் தொடர்ந்து பேச முயற்சி செய்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"

ஆச்சர்யமூட்டும் பதில்
"ஒண்ணுமே ஆகாது சார்"
"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?"
"உங்க கை வலிக்கும் சார்"
"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா..."
"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"
"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த டம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"
"இல்லை சார். அது வந்து..."
"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"
"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"

மனவியல் தீர்வு
"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"
இது தான் மனவியல் ரீதியீலான தீர்வு.



Click it and Unblock the Notifications