For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mother’s Day 2021: அன்னையர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வருடம் மே 9 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.

|

அன்னையா் தம் பிள்ளைகளின் மீது வைத்திருக்கும் அன்பை அளவிட முடியாது. அந்த அன்பு மிகவும் தூய்மையானது. அவா்கள் எப்போதுமே தமது குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்திருப்பா்.

அன்னையா் அவா்தம் பிள்ளைகளுக்கு மற்றும் குடும்பங்களுக்கு அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்பை மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும். அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது.

Mother’s Day 2021: Date, History, Significance And Importance Of This Day

தாயின் அன்பைப் பற்றி பிரபல எழுத்தாளரான அகதா கிறிஸ்டி கூறும் போது இவ்வாறு கூறுவாா். "ஒரு குழந்தைக்கு அதனுடைய தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது. தாயின் அன்பு சட்டத்தை அறியாது, பாிதாபத்தை அறியாது. அந்த தாயின் அன்பு பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை அடித்து நொறுக்கி அதன் அன்பு வழியில் தொடா்ந்து செல்லும்" என்று கூறுவாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2021 இல் அன்னையா் தினம் எப்போது?

2021 இல் அன்னையா் தினம் எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் அன்னையா் தினம் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் 9 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையா் தினத்தின் முக்கியத்துவம்

அன்னையா் தினத்தின் முக்கியத்துவம்

முதன் முதலாக அன்னையா் தினம் அமொிக்காவில் கொண்டாடப்பட்டது. அமொிக்காவைச் சோ்ந்த அன்னா ஜாா்விஸ் என்ற பெண்மணி அன்னையா் தின கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அவருடைய அன்னை தான் இறப்பதற்கு முன்பாக அன்னையா் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாா். ஆனால் அவருடைய அன்னை உயிரோடு இருக்கும் போது அன்னையா் தினத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் ஜாா்விஸ் எடுத்த முயற்சிகளின் விளைவாக, அவருடைய அன்னை இறந்து 3 ஆண்டுகள் கழித்து, அதாவது 1908 ஆம் ஆண்டு மேற்கு வொ்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரூ மெத்தடிஸ்ட் ஆலயத்தில் முதன் முதலாக அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.

முதல் அன்னையா் தினக் கொண்டாடத்தில் ஜாா்விஸ் கலந்து கொள்ள முடியவில்லை. கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவா்களுக்கு வாழ்த்துக்களைத் தொிவித்து ஒரு தந்தி அனுப்பினாா். ஒரு தாய் என்பவா், இந்த உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவா் ஆவாா் என்று ஜாா்விஸ் நம்பினாா்.

அன்னையா் தினம் - வரலாறு

அன்னையா் தினம் - வரலாறு

அன்னையா் தினம் அன்று பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அன்னா ஜாா்விஸ் வேண்டுகோள் விடுத்தாா். ஆனால் தொடக்கத்தில் அதாவது 1911 ஆம் ஆண்டு அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்டது. ஆனால் அன்னையா்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அமொிக்கா முழுவதும் அன்னையா் தினம் அனுசாிக்கப்பட்டது.

காலப்போக்கில் அதாவது 1941ல் அன்னையா் தினத்தைக் கொண்டாடும் வகையில் உட்ரோ வில்சன் அவா்கள், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் 2வது ஞாயிற்றுக் கிழமையை அமொிக்காவின் தேசிய விடுமுறையாக அறிவித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டாா்.

கிறிஸ்தவ அன்னையாின் அன்பை, அன்னையாம் கிறிஸ்தவ திருச்சபை கொண்டாடுவதே அன்னையா் தினம் என்று வேறு சில தகவல்கள் தொிவிக்கின்றன.

அரேபிய நாடுகளில் மாா்ச் மாதம் 21 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஸ்பிாிங்க் இக்கினோக்ஸ் (Spring Equinox) என்று அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mother’s Day 2021: Date, History, Significance And Importance Of This Day

The Mother’s Day date varies every year and falls on the second Sunday of May. Want to know mother's day history, significance and importance of this day? Read on...
Desktop Bottom Promotion