Latest Updates
-
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா?
உலகத்துல இந்த நாடுகள்தான் ரொமான்ஸ்ல டாப்ல இருக்கு! இதுல இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகம் முழுவதும் காதலால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்து உயிர்களிடத்தும் காதல் இருக்கிறது.
உலகம் முழுவதும் காதலால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்து உயிர்களிடத்தும் காதல் இருக்கிறது. காதல் இல்லாத இடமும் இல்லை, காதலிக்காத மனிதர்களும் இல்லை. காதல் அதிகமாக இருந்தாலும், அதை ரொமாண்டிக்காக வெளிபடுத்துவது மிக முக்கியம். சிலர் இந்த செயலை செய்ய மறுக்கிறார்கள். அல்லது அவர்களுக்கு இதை பற்றி சரியாக தெரிவதில்லை. ரொமாண்டிக் என்பது அன்போடு தொடர்புடைய நபரிடம் உணர்ச்சி ஈர்ப்பிலிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வு.

காதல் தனிநபரின் உணர்வு சம்பந்தபட்ட விஷயம்தான். தனிநபர்கள் அனைவரும் இணைந்ததுதான் சமுதாயம் . உலகில் உள்ள நாடுகளில் அதிக காதல் கொண்ட தேசியம் எது என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் பட்டியல், தற்போது வெளியாகியுள்ளது. இது அவர்களின் இயல்பு, வாழ்க்கை முறை அல்லது வாழ்க்கையைப் பற்றிய பொதுவான அணுகுமுறை ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டது. உலகின் முதல் பத்து ரொமாண்டிக் தேசியங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இத்தாலி
உலகில் காதலினால் அதிகளவு ரொமாண்டிக்காக இருக்கும் மக்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறந்த ரொமாண்டிக்கான தம்பதிகள் பட்டியலில் இத்தாலியர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் காதலை, பாசத்தை மிக அதிகமாக தங்கள் துணையிடம் காட்டுவார்கள். நல்ல ரொமாண்டிக்கான டேட்டிக் செல்வார்கள். இத்தாலியர்கள் தங்கள் அழகான இயல்பு, அருமையான உணவு மற்றும் ஒயின், அவர்களின் பணக்கார வரலாறு மற்றும் மெல்லிசை மொழி ஆகியவற்றின் காரணமாக ஈஸியாக அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள்.

பிரெஞ்சு
பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் இயல்பான காதலின் காரணமாக உலகில் பிரபலமாக உள்ளனர். அவர்கள் உண்மையிலேயே அன்பின் மொழியை அறிவார்கள். இவர்கள் காதல் மயக்கத்தில் எப்போதும் இருப்பார்கள். நல்ல உணவை உண்பது, சாக்லேட் மற்றும் மதுவை விரும்புவது என பிரெஞ்சுக்காரர்களின் வாழ்க்கை முறை மகிழ்ச்சியாக இருக்கும். பாரிஸ் காதல் சுற்றுலா நகரமாக அறியபடுவதற்கு, பிரெஞ்சு மக்களின் காதல்தான் காரணம். பிரஞ்சு மக்கள் அன்பை வெளிபடுத்துவதில் உண்மையிலேயே சிறப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

பிரேசில்
பிரேசிலியர்கள் மிகவும் ரொமான்டிக்கான நபர்கள். செக்ஸ் சம்பந்தமாக அவர்கள் எந்த கூச்சமும் காட்டுவதில்லை. மேலும் எப்போதும் பிரகாசமான மற்றும் மிகையான திருவிழாவை கொண்டாடுவார்கள். பிரேசிலியர்களின் சிற்றின்பத்தை அவர்களின் சம்பா நடனத்திலும் காணமுடியும். ரொமான்டிக் கொள்வதில் பிரேசில் நாட்டவர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.

ஸ்பானிஷ்
இந்த பட்டியலில் ஸ்பானிஷ் மக்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். அவர்கள் மிகவும் நல்ல காதலர்களின் நற்பெயரைக் கொண்டுள்ளனர். உற்சாகமான, அழகான மற்றும் ரொமான்டிக்கான, இந்த மக்களுக்கு காதல் செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். காதலின் உண்மையான அர்த்தம் அவர்களுக்கு தெரியும் என்பதால், தம்பதிகளுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.

அர்ஜென்டினா மக்கள்
அர்ஜென்டினா மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய காதலை கொண்டவர்கள். அர்ஜெண்டினா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. இந்த மக்களுக்கு காதலில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், இங்குள்ள தம்பதிகள் ரொமாண்டிக் நபராக இருப்பார்கள். அர்ஜென்டினா மக்களின் ரொமாண்டிக்கின் சரியான வெளிப்பாட்டை டாங்கோ நடனத்தில் காணலாம். இது உலகின் மிக பிரபலமான நடனம். சிவப்பு ஒயின்கள் முதல் டியாகோ மரடோனா மற்றும் லியோனல் மெஸ்ஸி போன்ற நட்சத்திரங்களின் விழுமிய கால்பந்து திறன்கள் வரை எல்லாவற்றிலும் கண்டறியக்கூடியது.

லெபனான்
பூமியில் உள்ள பெரும்பாலான காதல் தேசங்களில் லெபனான் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. லெபனான் மக்கள் அரபு உலகில் இருந்து மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டவர்கள். இவர்களின் உடல் தோற்றம் அவர்களின் இருண்ட தோல் மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய கண்கள் கொண்டவர்கள். லெபனான் மக்கள் உங்களை கவர்ந்திழுக்க ஆடை அணிவது மற்றும் நடந்துகொள்வது நன்றாக தெரிந்துகொள்ளலாம்.

அமெரிக்கா
அமெரிக்கர்கள் இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்த மக்கள் தங்கள் பாசத்தைக் காண்பிப்பதற்காக வெகுதூரம் செல்வார்கள். இந்த மக்கள் பல்வேறு கோர்ட் சடங்குகளுக்குச் சென்று தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள தயாராக உள்ளனர். அமெரிக்கர்களில் சிறந்த ரகசியம் நிறைய மெழுகுவர்த்திகள், கடல் உணவுகள், ஒயின் மற்றும் சாக்லேட்டுகள் கொண்ட ஒரு காதல் மாலை. ஒரு சந்தர்ப்பத்திற்காக அல்லது மற்றொன்றுக்கு அவர்கள் அடிக்கடி கொடுக்கும் ஆடம்பரமான உள்ளாடைகளை நீங்கள் சேர்க்கும்போது, அவற்றை யாரும் எதிர்க்க முடியாது.

ஸ்வீடன்
மீதமுள்ள மிகவும் அழகான மற்றும் காதல் நாடுகளில் ஸ்வீடிஷ் மக்களும் உள்ளனர். காதல் தொடர்பான அவர்களின் சமத்துவ அணுகுமுறை புத்திசாலித்தனமான லத்தீன் தோற்றம் அல்லது வெள்ளி மொழி பேசும் மக்களால் இந்நாட்டு மக்களின்மேல் நம்பிக்கை பிறக்கிறது. தோற்றத்திற்கு புகழ் பெற்ற, ஸ்வீடன் ஆணின் ரகசிய ஆயுதம் அவரது தங்க நிற உடல் அல்லது சரியான பற்கள் அல்ல. அவர்களுடைய ரொமாண்டிக் மற்றும் காதல் தன்மைதான் முதன்மை காரணம். சமீபத்தில் 12 நாடுகளில் நடத்திய ஆய்வில், ஸ்வீடன் ஆண்களின் பாலியல் வாழ்க்கை குறித்த அறிவார்ந்த அணுகுமுறைகள் வளர்ந்த நாடுகளில் சிறந்த கணவர்களாக திகழ்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.

அயர்லாண்ட்
மிகவும் அழகான மற்றும் காதல் தேசியங்களின் பட்டியலில் அயர்லாண்ட் மக்கள் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். அயர்லாண்ட் மக்கள் புத்திசாலித்தனமாக உடையணிந்து, மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். மேலும் தங்கள் பாசத்தினால், தன்னுடைய லவ்வரை கவர்ந்திழுக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள். ஆதலால், சிறந்த தம்பதிகளா அயர்லாண்ட் தம்பதிகள் இருக்கிறார்கள்.

இந்தியா
ஆசிய கண்டத்தில் மிகவும் காதல் கொண்ட நபர்கள் இந்தியர்கள். இவர்கள் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தின் இருக்கின்றனர். இந்தியர்கள் அவர்களது உறவில் உண்மையாகவும், நேர்மையாகவும், காதலுடனும் இருக்கின்றனர். 90% பேர் காதலர் தினத்தின்போது, தங்கள் துணையிடம் பாசத்தைக் காட்டுகிறார்கள். இந்தியர்களுக்கு காதலில் ஒரு வரலாறு உண்டு. நீடித்த அன்பின் அடையாளத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவில் உள்ளது. இது உலகின் மிகப் பிரபலமான காதல் நினைவுச்சின்னம்.



Click it and Unblock the Notifications
