Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க 'எல்லா' விஷயத்துலையும் கஞ்சத்தனமா இருப்பாங்களாம்..இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் எளிமையானவர்கள் மற்றும் சிக்கனமானவர்கள். பணம் செலவாகும் என்பதால், அவுட்டிங் போக வேண்டாம் என்று சொல்வார்கள். அதை மீறி அழைத்து சென்றால், அவர்கள் பணம் செலவு செய்ய மாட்டார்கள்.
சிக்கனமாக இருக்கவும் சேமிக்கவும் சிறுவயது முதலே நமக்கு கூறப்பட்டு வருகிறது. பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது, வாழ்வதற்கு பணம் மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாழ்க்கையில் சிக்கனமாக இருக்கும்போது, நாம் நிறைய பணத்தை சேமித்து வைக்க முடியும். இது நம் எதிர்காலத்திற்கு உதவும். அதேநேரம், சிலர் பணத்தை செலவழிக்க விரும்புகிறார்கள், அவர்கள் செலவழிப்பது மற்றும் சேமிப்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். இதில், இன்னும் சிலர் இருக்கிறார்கள் கஞ்சத்தனம் கொண்டு மிகவும் சிக்கனமாக இருப்பது. இவர்கள் தங்கள் பணத்தை எதற்காகவும் செலவழிக்க விரும்ப மாட்டார்கள்.

இந்த நபர்கள் பணத்தை செலவழிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ராசி அடையாளங்களின் அடிப்படையில், மிகவும் சிக்கனமான மற்றும் மிகவும் எரிச்சலூட்டும் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். நீங்கள் அவர்களில் ஒருவரா? இல்லையா? என்பதை அறிய இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

ரிஷபம்
சிக்கனமாக இருப்பதற்கும் சேமிப்பதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் ஆளுமை மற்றும் அந்த நேரத்தில் அவர்களின் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். அவர்கள் நன்றாக ஆராய்ச்சி செய்த விஷயங்களுக்காக பணத்தை செலவழிக்கிறார்கள் மற்றும் முதலீடு செய்வதற்கு முன் அவர்கள் நன்மை தீமைகளைப் பிரித்து பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, மக்களிடம் பணம் கொடுப்பதை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் உங்களை இரவு உணவிற்கு அழைத்துச் செல்லும் போது, பில்களைப் பிரிக்கச் சொல்வார் அல்லது ஒட்டுமொத்தமாக உங்களையே பணத்தை செலுத்த சொல்லலாம்.

கன்னி
இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். பணம் வரும்போது, அவற்றை பத்திரப்படுத்தியே வைப்பார்கள். தாங்கள் எவ்வளவு பணம் செலவு செய்கிறோம் என்பதற்கான சரியான வரவுசெலவு கணக்கை அவர்கள் பராமரிக்கின்றனர். இந்த ராசிக்காரர்கள் பணம் செலவழிப்பதை கண்காணிப்பது ஒரு நல்ல யோசனை மற்றும் பழக்கம் என்றாலும், சில நேரங்களில் அதை வெகுதூரம் எடுத்துச் செல்வார்கள்.

மகரம்
அற்பமான செலவினங்களிலிருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது மகர ராசிக்காரர்கள் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் இன்னும் அதிகமாகச் செல்ல முடியும். இந்த ராசிக்காரர்கள் அதிகப் பணத்தைச் செலவழிப்பதால், மக்கள் தங்கள் நிலையைப் பறைசாற்றுகிறார்கள். உண்மையில் அந்தப் பழக்கம் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனால், இவர்கள் சிக்கனமாக இருக்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் எளிமையானவர்கள் மற்றும் சிக்கனமானவர்கள். பணம் செலவாகும் என்பதால், அவுட்டிங் போக வேண்டாம் என்று சொல்வார்கள். அதை மீறி அழைத்து சென்றால், அவர்கள் பணம் செலவு செய்ய மாட்டார்கள். மற்றவர்களை செலவு செய்ய சொல்லி விடுவார்கள். அவர்கள் தங்கள் பணத்தைப் பூட்டிவைத்து விட்டு அதைத் தொடவே மாட்டார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், கடகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு எப்போது செலவு செய்ய வேண்டும், எப்போது கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அதனால், செலவு செய்வதில் இவர்கள் சரியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











