Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசி ஆண்கள் மனைவி மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பாங்களாம்... இவங்கள கட்டிக்கிறவங்க பாவம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மற்றவர்களை எப்பொழுதும் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள்.
வெற்றிகரமான திருமண உறவிற்கு பின்னால் பல காரணிகள் இருந்தாலும், தம்பதிகளுக்கு இடையே இருக்கும் இணக்கம் மிகமுக்கியமான ஒன்றாகும். இணக்கத்தன்மையைப் பற்றி பேசும்போது, உங்கள் எண்ணங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு கூட்டாளரைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். சிலர் அடிபணிந்தவர்களுடன் இருப்பதை விரும்பலாம், சிலரோ தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் துணையுடன் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக செலவிடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மற்றவர்களை எப்பொழுதும் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இது அவர்களின் வாழ்க்கைத்துணைக்கும் பொருந்தும். அதன்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் இல்வாழ்க்கையில் அதிகாரம் எப்போதும் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனம் முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த ராசி காட்டின் ராஜாவான சிங்கத்தை அடையாளமாகக் கொண்டு குறிக்கப்படுகிறது. இவர்களின் குணாதிசியங்களும் சிங்கத்தை போன்றதுதான். சிங்கத்தைப் போலவே ஆதிக்கம் செலுத்தும் கணவராக இருக்க இவர்கள் விரும்புவார்கள்.

தனுசு
தனுசு ராசி ஆண்களின் ஆன்மா பயணத்தை விரும்பக்கூடியது. எந்த எல்லைகளுக்குள்ளும் கட்டுப்படாத சுதந்திர உணர்வை அவர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் அடிபணிவதை விரும்பமாட்டார்கள், அதனாலேயே அதற்கு எதிர்மறையாக இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக இல்லற வாழ்க்கையில் தங்களின் வார்த்தைகளே மேலே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையை வாழ நினைக்கின்றனர். மற்றவர்கள் அவர்களின் விருப்பங்களுக்கு எதிராக நடக்கும் போது இவர்கள் மிகவும் எரிச்சலடைவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்களின் வழியில் நடத்த விரும்புவதால் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதற்கு தடை ஏற்படும்போது இவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பார்கள்.

விருச்சிகம்
இந்த ராசிக்கார ஆண்கள் மிகவும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் ஆனால் இவர்கள் ஒருபோதும் யாரையும் மன்னிக்க மாட்டார்கள் என்பது இவர்களுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் கட்டுப்படுத்த விரும்புபவர்கள். இவர்கள் அக்கறையான வாழ்க்கைத்துணையாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்துவதே இவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும்.

கடகம்
கடக ராசி ஆண்கள் மனரீதியாக வலிமையுடவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களின் வெளிப்புற வாழ்க்கை வெற்றிகளும், பாராட்டுக்களும் நிறைந்ததாக இருக்கும். இது நல்ல விஷயமாக இருந்தாலும் அவர்கள் இதையே தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர்பார்ப்பார்கள். தங்களின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனைவியை கட்டாயப்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications
