Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம் தெரியுமா?
தற்காத்து கொள்ளும் திறன் என்பது வளர்த்துக் கொள்ள கூடியதுதான், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையும், துரோகமும் நம்முடைய தற்காப்பு திறனை அதிகரிக்கும்.
வாழ்க்கையில் பாதுகாப்பு உணர்வு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய உணர்வாகும். ஏனெனில் நமது மீதான தாக்குதல் என்பது எந்த திசையில் இருந்து எப்பொழுது வேண்டுமென்றாலும் யார் மூலமாகவும் வரலாம். இந்த உலகத்தில் உங்களைத் தவிர யாரையும் முழுமையாக நம்பாமல் இருப்பது உங்களுக்கு நல்லதாகும், ஏனெனில் யார் வேண்டுமென்றாலும் எந்த தருணத்தில் வேண்டுமென்றாலும் உங்களுக்கு எதிரியாகவோ அல்லது துரோகியாகவோ மாறலாம்.

தற்காத்து கொள்ளும் திறன் என்பது வளர்த்துக் கொள்ள கூடியதுதான், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையும், துரோகமும் நம்முடைய தற்காப்பு திறனை அதிகரிக்கும். ஆனால் சிலருக்கு இந்த தற்காப்பு திறன் இயற்கையாகவே உடன் பிறந்ததாக இருக்கும். இவர்களை தாக்குவதோ, ஏமாற்றுவதோ கடினமானதாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த திறன் சிலருக்கு அவர்களின் பிறந்த ராசி மூலம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தற்காத்து கொள்ளும் திறன் அதிகம் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராய் இருப்பார்கள். இவர்கள் பொதுவாக மற்றவர்களை நம்புவதில்லை, அதற்கு அவர்களுக்கு முழுஉரிமை உண்டு. அடுத்தடுத்து சவால்களை எதிர்கொள்ள இவர்கள் எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள், இது அவர்களுக்குள் ஒரு ஈகோவை அதிகரிக்கும். இவர்கள் பொதுவாக யாரையும் நம்பாமல் இருப்பதால் அனைவரின் மீதும் சந்தேகம் கொள்வார்கள். ஒருவர் இவர்களுக்கு எதிராக ஏதாவது செய்கிறார்கள் என்று இவர்களுக்கு தெரிந்தால் முதல் அடி இவர்கள் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஒரு சேகரிப்பாளர்கள். ஏனெனில் இவர்கள் நண்பர்கள், உறவுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் சேகரிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் உறவுகளையும், உடமைகளையும் மற்றவர்கள் தந்திரமாக பறிக்கும் போது இவர்கள் கோபப்படுவார்கள். துலாம் ராசிக்காரர்களை உங்களால் விமர்சிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் தான் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பார்கள். தேவை ஏற்படும்போது தன்னையும், தான் சார்ந்த அனைவரும் இவர்கள் பாதுகாத்து கொள்வார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் அவர்கள் தன்னை பாதுகாத்துக் கொள்பவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் பாதுகாத்து கொள்வது உங்களிடம் இருந்து என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் தற்காத்துக் கொள்வதுடன் தாக்கவும் செய்வார்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என்று நினைத்தால் அதன்பின் நீங்கள் அவர்கள் கண்ணில் படமால் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. அவர்களின் எதிரிகள் பட்டியலில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் மீது தாக்குதல் நடந்தாலும், நடக்கா விட்டாலும் எப்போதும் தற்காப்புடன்தான் இருப்பார்கள். இதனை அவர்கள் தங்களின் அடையாளமாக பார்க்கிறார்கள். யாரோ ஒருவர் அவர்களுடன் உடன்படவில்லை என்று அவர்கள் காத்திருப்பது போல் தோன்றினால், அவர்கள் வெறுக்கத்தக்க தற்காப்பில் ஈடுபடுவார்கள். தன்னை யாரும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்த இவர்கள் விரும்புகிறார்கள். இதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள். இவர்களுடன் பழகுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் எதுவாக இருந்தாலும் அதில் முழுஅர்பணிப்புடன் ஈடுபடுவார்கள். இவர்கள் கடினமாக நேசிப்பார்கள் அதேசமயம் தனது எல்லையை விட்டு வெளியே வரமாட்டார்கள். இவர்களுடன் நெருங்கிப் பழக நினைத்தாலும் அது கடினமான ஒன்றுதான், ஏனெனில் இவர்கள் யாரையும் நம்பமாட்டார்கள், உங்களால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்று நினைப்பார்கள். தன்னை தற்காத்து கொள்ள இவர்கள் அனைவரிடமும் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இதற்காக அவர்கள் எதையும் ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications
