For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் மக்கள் வாழ தகுதியில்லாத ஆபத்தான நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

|

உலகத்தில் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் அஞ்சி வாழும் சூழல் பல நாடுகளில் நிலவுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்கள் அதிகரிக்க தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்கள் அங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளின் அளவை பொறுத்து கணக்கிடப்படுகிறது. ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது என்பது அரசியல் பயங்கரவாதம், உள் மோதலிலிருந்து இறப்பு, கொலை விகிதம் போன்ற 23 வெவ்வேறு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது அல்லது பாதுகாப்பானது என்பது அளவிடப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் குற்ற விகிதங்கள். குற்றங்கள் செய்யப்படுவதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்றாலும், அதிக குற்ற விகிதங்களுக்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் நாடுகள் மக்கள் வாழ ஆபத்தான நாடுகளாகவே இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் இந்தியாவையும் இந்த பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டாப் 10-ல் இந்தியா இல்லை. உலகின் ஆபத்தான நாடுகள் என்னென்ன இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#10 ரஷ்யா

#10 ரஷ்யா

ரஷ்யா இந்த பட்டியலில் 10 வைத்து இடத்தில் உள்ளது. ரஷ்யாவின் உயர் இராணுவமயமாக்கல் இந்த பட்டியலில் ரஷ்யாவை இடம் பெற வைத்துள்ளது. அதுமட்டுமின்றி தனிநபர் ஆயுத ஏற்றுமதியும், ஆயுத உபயோகமும் இங்கு அதிகளவில் உள்ளது.

#9 காங்கோ ஜனநாயக குடியரசு

#9 காங்கோ ஜனநாயக குடியரசு

இந்நாட்டின் அரசு நாடு முழுவதும் ஏராளமான எதிர்ப்புக்களைக் காண்கிறது, அவை பெரும்பாலும் வன்முறையாக மாறுகிறது. ஆயுதமேந்திய வீட்டு படையெடுப்பு, கொள்ளைகள் மற்றும் அதிக வழக்குகளுக்குத் தாக்குதல் நடத்துதல் போன்ற குற்றச் செயல்களால் குற்ற விகிதம் மிக அதிகமாக உள்ளது. மேலும் குற்றங்களை குறைக்கும் அளவிற்கு இங்கு காவல்துறையினரும் அதிகளவில் இல்லை.

#8 லிபியா

#8 லிபியா

இந்த வட ஆப்பிரிக்க நாடு 8 ஆம் இடத்தில் உள்ளது. அதிக அளவு குற்றங்கள், உள்நாட்டு அமைதியின்மை, கடத்தல், ஆயுத மோதல்கள் மற்றும் பயங்கரவாதத்தை இந்த நாடு அனுபவித்து வருகிறது. லிபியாவில் வன்முறை பெரும்பாலும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கும் போராளிகளால் ஏற்படுகிறது.

உலக வரலாற்றை மாற்றிய இரகசிய சமூகங்கள்... இந்த உலகம் இப்படி மாற இவங்கதான் காரணம்...!

#7 மத்திய ஆப்பிரிக்க குடியரசு

#7 மத்திய ஆப்பிரிக்க குடியரசு

இந்த நாடு 7 ஆம் இடத்தில் உள்ளது. 2017 ல் கையெழுத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும் ஆப்பிரிக்க தேசத்தில் இன்றும் குழப்பம் நிலவுகிறது. செலிகா கிளர்ச்சியாளர்களுக்கும் பாலாக்கா எதிர்ப்பு போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. இந்த மோதலானது உள்நாட்டில் 620,000 மக்களை இடம்பெயரவும் 570,000 அகதிகளை அண்டை நாடுகளுக்கும் செல்ல வைத்துள்ளது.

#6 சோமாலியா

#6 சோமாலியா

காவல் துறையினர் இல்லாதது, நிலவும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை ஏற்கனவே நாட்டில் நிலையற்ற சூழலை அதிகப்படுத்தியுள்ளன. இந்த நாட்டில் அதிக கடத்தல் அபாயங்கள் உள்ளது, விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் பொதுவானவை. வெளிநாட்டினர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா. தொழிலாளர்கள் பெரும்பாலும் போராளிகளால் குறிவைக்கப்படுகிறார்கள்.

#5 ஈராக்

#5 ஈராக்

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளி மோதல்கள் நாட்டில் உள்ளன. இதனால் நாடு ஆபத்தான பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது. அவர்கள் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைகளின் உறுப்பினர்களைக் கடத்திக் கொலை செய்கிறார்கள். இதனால் இங்கு மக்கள் வாழ் இயலாத சூழ்நிலை நிலவுகிறது.

செக்ஸ் பற்றி இத்தனை காலமாக கூறிவந்த இந்த விஷயங்கள் அனைத்தும் பொய்தானாம்... இனிமேலும் ஏமாறாதீங்க...!

#4 ஏமன்

#4 ஏமன்

2015 ல் தொடங்கிய ஏமனின் உள்நாட்டுப் போர் இன்றும் தொடர்கிறது, அந்த நாடு உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த மோதலின் விளைவாக 4.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகவும், 14 மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் ஆபத்தான நோய்கள் தாக்கும் அபாயத்திலும் உள்ளனர்.

#3 தெற்கு சூடான்

#3 தெற்கு சூடான்

உள்நாட்டு அமைதியின்மை, நடந்துகொண்டிருக்கும் அரசியல் மோதல்கள் மற்றும் பரவலான குற்றங்கள் - கொள்ளைகள், தாக்குதல்கள், கார் திருட்டு மற்றும் கடத்தல் உள்ளிட்டவை இந்த நாட்டை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது. நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு வெளியே சட்டம் மற்றும் ஒழுங்கு இல்லாத அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் இடையில் ஆயுத மோதல்கள் பெரும்பாலும் நடக்கின்றன.

#2 சிரியா

#2 சிரியா

கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்த மத்திய கிழக்கு நாடு இந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. மார்ச் 2011 முதல் இந்த நாடு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது கொடிய யுத்தம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு 55,000 குழந்தைகள் உட்பட 470,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆண்களை அடிமையாக வைத்து பெண்கள் அரசாளும் நாடு... தலைசுற்ற வைக்கும் உலகின் விசித்திரமான நாடுகள்...!

#1 ஆப்கானிஸ்தான்

#1 ஆப்கானிஸ்தான்

2019 உலகளாவிய அமைதி குறியீட்டின்படி, ஆப்கானிஸ்தான் தலிபான்களிடமிருந்து கொடிய தாக்குதல்களை அனுபவிப்பதால் உலகின் மிக ஆபத்தான நாடாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் பயங்கரவாதத்தால் இறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2019 ல்அந்த நாடு மோதலில் 3,804 பொதுமக்கள் இறப்பை சந்தித்தது, அவர்களில் 927 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#23 இந்தியா

#23 இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கும்பல் கொலை, மத முரண்பாடு மற்றும் ஊழல் குறித்த கலவரம் ஆகியவை இந்த பட்டியலில் இந்தியாவை 23 வது இடத்தைப் பிடிக்க வைத்துள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Dangerous Countries In the World

Check out the top10 most dangerous countries in the world