Latest Updates
-
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்..
இந்த 7 ராசிக்காரங்கள காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்... உங்க ராசி என்ன?
இந்த பூமியில் இருக்கும் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவராகத்தான் இருப்பார்கள். அவரவர் ஆளுமையில் நிறைகள் மற்றும் குறைகள் என இரண்டுமே இருக்கத்தான் செய்யும்.
இந்த பூமியில் இருக்கும் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவராகத்தான் இருப்பார்கள். அவரவர் ஆளுமையில் நிறைகள் மற்றும் குறைகள் என இரண்டுமே இருக்கத்தான் செய்யும். சிலர் அனைவரிடமும் சகஜமாக பழகுவதை விரும்புவார்கள், சிலரோ தனிமையில் இருப்பதைத்தான் விரும்புவார்கள்.

காதல் என்று வரும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிவழி வைத்திருப்பார்கள். சிலர் காதலில் தங்களின் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், சிலர் தங்கள் காதல் துணையின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியையே தங்களின் இலட்சியமாக வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை காதலிப்பது உங்களுக்கு வசதியானது என்று பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் நம்பிக்கையான பார்வை மற்றும் அச்சமற்ற தன்மைக்கு புகழ் பெற்றவர்கள். வெளிப்படையான குணம் கொண்ட இவர்கள் காதலிக்கும்போது வெளியே செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போதும் அது சிறப்பான ஒன்றாக இருக்க தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அழகான உடை, செல்ல வேண்டிய இடம் என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள் அதேசமயம் காதலில் புதிய பரிசோதனைகளை செய்ய விரும்புவார்கள். அடிப்படையில் பிடிவாத குணம் கொண்ட இவர்கள் முற்றிலும் திட்டமிடாத டேட்டிங் செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சமூகத்துடன் இணைந்திருப்பதில் இவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள் அதற்கு காரணம் அவர்களின் நட்பான குணம்தான். புதியவர்களுடன் பழகுவதற்கு இவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் கொண்டவர்கள் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள். புதிய உறவுகளை உருவாக்குவதையும், உற்சாகமானவர்களுடன் உரையாடுவதையும் அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையில், அவர்கள் சமூக பட்டாம்பூச்சிகளாக இருக்க விரும்புவார்கள். இவர்களை காதலிப்பது திருப்பங்கள் நிறைந்த மலையோர பயணம் போல சுவாரஸ்யமானதாக இருக்கும்.

மேஷம்
மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் கவர்ச்சியானவர்கள் மற்றும் பொதுவாக தங்கள் மனதில் பட்டதை பேசக்கூடியவர்கள். அவர்கள் ஒருவரை விரும்பினால், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அந்த கணத்தை வாழ முயற்சிப்பார்கள். அவர்கள் தைரியமான மற்றும் தன்னிச்சையான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். இவர்களுடனான காதல் புதிய அனுபவமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை, எனவே காதலருடன் வெளியே செல்ல இவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. அவர்கள் திறந்த மனதுடன், வெளியில் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது இவர்கள் தங்கள் காதலரின் உதவியையும், ஆலோசனையையும் நாடுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக ஒரு நபருடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் ஒருமுறை அவர்களை நம்பி விட்டால் அந்த உறவை மேலும் நெருக்கமாக்க அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். இவர்கள் சமூகத்தில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் இவர்களுக்கு பிடித்தவர்களுடன் மட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சமூகத்துடன் இணைந்திருப்பதை விரும்புகிறார்கள், இவர்கள் தங்கள் துணைக்கு எப்பொழுதும் அனைத்திலும் சமமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே இவர்களுடன் காதலில் இருக்கும்போது அவர்களின் துணை தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை ஒருபோதும் ஏற்படாது.



Click it and Unblock the Notifications
