Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் கில்லாடி இந்தியர்... அடேங்கப்பா அசைக்க முடியாத கின்னஸ் சாதனை...!
உலகில் சில வித்தியாசமான குடும்பங்கள் இருக்கிறது. இந்த குடும்பங்கள் வித்தியாசமானது மட்டுமல்ல ஆச்சரியமானவையும் கூட.
உலகின் மிகவும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று குடும்பமாகும். குடும்பம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் நமது அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருப்பது நம்முடைய குடும்பம்தான். நமது குடும்பம்தான் எப்போதும் சிறந்தது என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் நமது குடும்பம் வித்தியாசமானதா என்றால் இல்லை என்றுதான் கூறுவோம்.

உலகில் சில வித்தியாசமான குடும்பங்கள் இருக்கிறது. இந்த குடும்பங்கள் வித்தியாசமானது மட்டுமல்ல ஆச்சரியமானவையும் கூட. ஏனெனில் அதிகளவு உறுப்பினர்கள் முதல் அதிக பேரை குடும்பமாக கொலை செய்தது வரை பல வித்தியாசமான குடும்பங்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பதிவில் இதுவரை வெளியுலகத்திற்கு தெரிந்துள்ள சில விசித்திரமான குடும்பங்களை பற்றி பார்க்கலாம்.

தி டகர் பேமிலி
ஒரே தம்பதியினருக்கு அதிக குழந்தைகள் இருக்கும் குடும்பம் என்ற பெருமையை இந்த குடும்பம் பெற்றுள்ளது. ஜிம் பாப் மற்றும் மைக்கேல் டகர் தம்பதியினர் 9 பெண் குழந்தைகள் மற்றும் 10 ஆண் குழந்தைகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். இவர்கள் 19 கிட்ஸ் அண்ட் கவுன்டிங் என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியை செய்தனர். அவர்கள் பல குழந்தைகளைக் கொண்டிருப்பதற்கான காரணம் எளிதானது, அவர்கள் மத நம்பிக்கையின் காரணமாக எந்தவிதமான கருத்தடைகளையும் எடுக்க மறுப்பதுதான்.

தி சானா பேமிலி
மேலே படித்த டகர் குடும்பம்தான் உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறாகும். ஏனெனில் சியோனா சானா என்ற மிசோராமை சேர்ந்த இந்தியர் 39 பெண்களை திருமணம் செய்து 94 குழந்தைகளுடனும், 14 மருமகள்களுடனும், 34 பேரக்குழந்தைகளுடனும் மொத்தம் 180 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பஸ்தன் என்ற கின்னஸ் சாதனையை செய்துள்ளார்.

தி மார்ஷல் பேமிலி
இந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் போலி மார்பங்கள் பெற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். இந்த குடும்பத்தில் இருக்கும் பிரிட்னி மார்ஷல் என்ற ஒரு பெண்ணைத் தவிர மீதமுள்ள அனைத்து பெண்களுக்கும் மிகப்பெரிய மார்பகங்கள் இருக்கிறது. 4 சகோதரிகளை கொண்ட இந்த பெண் தன்னுடைய சகோதரிகள் போல மார்பக அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்ற உறுதியுடன் உள்ளார். பெரிய மார்பகங்கள் இருப்பதாலேயே இவர்கள் குடும்பம் உலகின் விசித்திரமான குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

தி மேன்சன் பேமிலி
சார்லஸ் மேன்சன் என்பது உலகின் மிகவும் மோசமான மற்றும் பிரபலமான தொடர் கொலையாளிகள் ஆவர். இசைக்கலைஞராக இருந்து குற்றவாளியாக மாறிய இவர்கள் 1969 முதல் 1971 வரை பல கொலைகளை செய்தனர். தன்னை கிறிஸ்து என்று கடுமையாகக் கூறிக்கொண்ட சார்லஸ், மக்களைக் கொல்வதன் மூலம் ஒரு பேரழிவு இனப் போரைக் கொண்டுவருவார் என்று கூறப்பட்டது. மேன்சன் உண்மையில் ஒரு குடும்பம் அல்ல, பல குற்றங்களைச் செய்த குற்றவாளிகளின் குழுவாகும்.

லியா மற்றும் அரோ(இரத்தக்காட்டேரிகள்)
லியா பென்னிங்ஹாஃப் மற்றும் அரோ டிராவன் ஆகியோர் உலகின் மிகவும் விசித்திரமான தம்பதிகளாக அறியப்படுகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை இவர்கள் ஒருவரின் இரத்தத்தை மற்றொருவர் குடிக்கின்றனர். கேட்பதற்கே வினோதமாக இருக்கிறதா?. இரத்தத்தை குடிப்பது அவர்களை என்றென்றும் ஒன்றாக வைத்திருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் இணையத்தில் ஒரு கிராஃபிக் வீடியோவை வெளியிட்டனர், அதில் இருவரும் தங்களை வெட்டிக் கொள்கிறார்கள், மற்றவர்கள் இரத்தம் குடிக்கிறார்கள். இது நிச்சயமாக அவர்களை உலகின் வித்தியாசமான குடும்பங்களில் ஒன்றாக மாற்றியது.

தெரசா நோர் மற்றும் குழந்தைகள்
6 குழந்தைகளின் தாய் தெரேசா நோர் உடல்ரீதியாகவும், வாய்மொழியாகவும், உளவியல்ரீதியாகவும் தனது குழந்தைகளை துன்புறுத்தினார். அவள் 4 ஆண்களை மணந்து குறுகிய காலத்திற்குள் விவாகரத்து செய்தார், அதற்கு காரணம் அவரின் நிலையற்ற மனதாகும். நான்காவது விவகாரத்திற்கு பிறகு அவர் மேலும் மோசமானவராக மாறினார். இவர் தனது குழந்தைகளை வெளியுலகத்தில் இருந்து தனிமைப்படுத்தினார். அவர்கள் வெளியே சென்று தொலைபேசியில் கூட யாரையும் தொடர்பு கொள்ள அனுமதிக்காமல் இருந்தார். பல ஆண்டுகளாக, நார் தனது குழந்தைகளை கட்டாயமாக உணவளித்தல், பொருள்களால் அடிப்பது, சிகரெட்டுகளால் சுடுவது, அவர்கள் மீது கத்திகளை எறிவது, துப்பாக்கியால் மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தார். அவரது துஷ்பிரயோகம் இரண்டு மூத்த சகோதரிகளின் மீது அதிக கவனம் செலுத்தியது, மேலும் அவர் மற்ற குழந்தைகளைப் பயன்படுத்தி சிறுமிகளை சித்திரவதை செய்ய வைத்தார். தனது மூத்த மகள் சூசன் ஒரு சூனியக்காரி என்று அவள் நம்பினாள். ஒரு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு சூசன் உதவிக்காக வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஆனால் சூசன் மனரீதியாக நிலையற்றவர் என்று தெரசா போலீசாரை நம்ப வைத்ததால் அவளை மீண்டும் தனது தாயிடம் அனுப்பினர். சூசனை நோர் மீண்டும் சித்திரவதை செய்தார், இறுதியில் 22- காலிபர் துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டார். தெரசா நோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போட்கோபேவ் பேமிலி
கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம், இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேரைக் கொன்றனர். அவர் எண்ணற்ற எண்ணிக்கையிலான கொள்ளைகளைச் செய்தார், மேலும் பலரைக் கொல்வதற்கு முன்பு சித்திரவதை செய்தார். இருப்பினும், அவர்களின் மகள் விக்டோரியா மிகவும் அதிர்ஷ்டசாலி அல்ல, ஏனெனில் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டாள். இறுதியில் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதற்குள் இவர்களால் பல உயிர்கள் பறிபோய்விட்டது.

தி ஃபிரிட்ஸ் பேமிலி
2008 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் வழக்கு உலகளவில் கவனத்தை ஈர்த்தது. எலிசபெத் ஃபிரிட்ஸ்ல் ஆஸ்திரியாவின் உள்ளூர் போலீசாரிடம் தனது தந்தை ஜோசப் ஃபிரிட்ஸால் 24 ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டதாக கூறினார். அவர் அவளை அடித்தளத்தில் பூட்டியது மட்டுமல்லாமல், 24 ஆண்டுகளாக சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில் இந்த பாலியல் துஷபிரோயோகத்தின் விளைவாக 8 குழந்தைகள் பிறந்தனர். இதில் 4 குழந்தைகள் தாயுடன் இருந்தனர், இ குழந்தை பிறந்த சில நாட்களில் சுவாசப் பிரச்சினையால் இறந்தது, 3 குழந்தைகளை ஜோசப் ஃபிரிட்ஸ்ல் மற்றும் அவரது மனைவி வளர்த்தனர். கெர்ஸ்டின் என்ற மூத்த மகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, ஜோசப் எலிசபெத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்தார். இந்த சமயத்தில்தான் இந்த வழக்கு வெளிவந்தது.



Click it and Unblock the Notifications











