Latest Updates
-
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
தனுசு செல்லும் புதனால் பணப்பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2020 டிசம்பர் 17 ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சென்று குருவுடன் இணையப் போகிறார். இந்த புதனின் மாற்றம் உடனடி முடிவுகளை அளிக்கப் போகிறது.
நவகிரகங்களில் புதனின் நன்மை, தீமையானது அது எந்த கிரகத்துடன் சேர்கிறதோ, அதைப் பொறுத்து தான் உள்ளது. இதுவரை புதன் விருச்சிகத்தில் இருந்து செவ்வாய் உடன் இணைந்திருந்தார். ஆனால் 2020 டிசம்பர் 17 ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சென்று குருவுடன் இணையப் போகிறார்.

இப்போது டிசம்பர் 17 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 9 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். ஒன்பதாவது வீட்டிற்கு செல்லும் புதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்கலாம். குறிப்பாக பயணத்தின் போது அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். எனவே பயணம் மேற்கொள்ளும் முன் முழுமையாக உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு தயாராகிக் கொள்ளுங்கள். ஆனால் இந்த காலத்தில் மேற்கொள்ளும் பயணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிகத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்களின் உடன்பிறப்புக்கள் உங்களுக்கு முழு ஆதரவை அளிப்பார்கள். இது சமுதாயத்தில் உங்கள் நிலை உயர உதவியாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 8 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இந்த பெயர்ச்சியால், நீங்கள் நிதி ரீதியாக சில சவால்களை எதிர்கொள்வீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மறுபுறம், உங்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் என்று வரும் போது, இந்த காலம் சாதகமாக இருக்கும். உங்கள் காதலி/காதலனுடன் அழகான நினைவுகளை உருவாக்கும்படியான பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இது உங்கள் உறவை வலுவாக்க உதவும்.

மிதுனம்
மிதுன ராசியின் 1 மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான புன், இந்த பெயர்ச்சியால் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும் மற்றும் அதை நன்றாக விரிவுபடுத்தவும் முடியும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் அழகான தருணங்களை செலவிடுவீர்கள். மேலும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான எந்தவொரு பதற்றம் அல்லது தகராறும் நீங்கும். உங்கள் மனைவி பணிபுரிந்தால், அவர்கள் பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள், மேலும் பதவி உயர்வு பெறலாம். இந்த காலத்தில் சொத்து தொடர்பான ஒரு பெரிய முடிவை எடுப்பீர்கள். ரியல் எஸ்டேட் அல்லது சொத்து வாங்குவீர்கள். இது உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

கடகம்
கடக ராசியின் 3 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான புன், இந்த பெயர்ச்சியால் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்கும். ஆகவே செலவுகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் எதிரிகளிடமிருந்து நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் நீங்கள் சிந்தித்துப் பேச வேண்டும் மற்றும் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், அது பெரிய சிக்கலில் சிக்க வைத்துவிடும். தொழில் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். உங்கள் எதிரிகள் கூட உங்களைப் பாராட்டுவார்கள். இது உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணி பொறுப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இந்த பெயர்ச்சியால் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதன் விளைவாக உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல்வேறு மூலங்களில் இருந்து லாபத்தைப் பெறுவீர்கள். புதனின் இந்த மாற்றம் உங்கள் குழந்தைகளுக்கும் சாதகமாக இருக்கும். அவர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்களுக்கும் உங்கள் காதலி/காதலனுக்கும் இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்களின் ஆழ்ந்த உணர்வுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்துவீர்கள். இது உங்களின் உறவை பலப்படுத்தும் மற்றும் வாழ்க்கையின் முன்னேறவும் உதவும். கல்வித்துறையில் இருப்பவர்கள், விரும்பத்தக்க விளைவுகளைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 1 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இப்பெயர்ச்சியின் போது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வலுவாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். உங்களின் முழு கவனமும் குடும்பத்தின் மீது இருப்பதால், வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். புதனின் இந்த பெயர்ச்சி செல்வ ஆதாயத்தையும் குறிக்கிறது. எனவே வாகனம் வாங்க விரும்புபவர்கள், அதை வாங்க முயற்சிக்கலாம். உங்களின் தொழில் வாழ்க்கை வலுபெறும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறனால், உங்களின் பணிகளை சரியான நேரத்தில் சிறப்பாக முடிப்பீர்கள். இதன் காரணமாக, உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் வணிகம் செழிக்கும் மற்றும் அதை விரிவாக்கவும் நினைப்பீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 9 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இந்த பெயர்ச்சியில் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் கருத்துக்களை மற்றவர்களுக்கு முன் தெளிவாக வைப்பீர்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு சாதமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் என்பதால், அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை மேம்படும். உங்கள் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களின் பிரச்சனைகள் மற்றும் சந்தோஷத்தை உடன்பிறப்புக்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இது உங்கள் இருவருக்குள் இருக்கும் உறவை வலுப்படுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இந்த பெயர்ச்சியால் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்கள் வருமானம் அதிகரித்து, உங்களின் நிதி நிலைமைகளை பலப்படுத்தும். அதைத் தொடர்ந்து, குடும்ப நிலைமைகளும் கடுமையாக மேம்படும். உங்கள் எல்லா பொறுப்புகளையும் நீங்கள் மிக எளிதாக நிறைவேற்றுவீர்கள், இது உங்களை குடும்ப உறுப்பினர்களால் அதிக மரியாதைக்குரியதாக மாற்றும். இந்த காலகட்டத்தில், உங்கள் மாமியார் தரப்பிலிருந்து நீங்கள் பயனடையலாம். அவர்கள் எந்த வகையிலும் உங்களுக்கு உதவ முன்வரலாம். இந்த நேரத்தில், பயணம் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும்.

தனுசு
தனுசு ராசியின் 7 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான புதன், முதல் வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இதனால் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் நிலை மேம்படும். வணிகத்தைப் பொறுத்தவரை, இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வணிகத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, புதனின் இந்த பெயர்ச்சி ஏற்கனவே தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க வழிசெய்யும். இந்த பெயர்ச்சியால் தம்பதியர்களின் உறவு வலுப்பெறும். தொழில் வலுவடைந்து வருவதால், நீங்கள் உங்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்களின் ஆளுமையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 6 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 6 ஆவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் நீங்கள் உங்களின் எதிரிகளை எதிர்த்துப் போராட பல்வேறு உத்திகளைத் திட்டமிடுவீர்கள். அவர்களை வெற்றிப் பெறுவதைத் தடுக்க சிறப்பாக உங்களால் முடிந்தவரை முயற்சிப்பீர்கள். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே நிதி வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் சந்திப்பதைத் தவிர்க்க, ஒரு பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். சமுதாயத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். மேலும் உங்கள் பணிகளில் எந்தவிதமான தடைகளையும் நீங்கள் எதிர்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் திறந்த மனதுடன் உங்கள் பணத்தை செலவிடுவீர்கள். அதுமட்டுமல்லாமல், கடன்களில் இருந்தும் விடுபடுவீர்கள். ஆனால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 5 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான புதன் 11 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். புதனின் இந்த பெயர்ச்சி மூலம், உங்கள் செல்வத்தைப் பெருக்க கடினமாக முயற்சிப்பீர்கள். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த உதவும். உங்கள் நற்பெயர் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களின் காதல் வாழ்க்கை செழிக்கும். உங்கள் காதலன்/காதலியுடன் மறக்கமுடியாத தருணங்களை செலவிட நீங்கள் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் உறவு வலுப்பெறும். இதனால் உங்கள் காதல் செழிக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் பிள்ளை இந்த காலகட்டத்தில் முழுமையாக வெற்றி பெறுவர். மேலும் அவர்கள் தங்கள் பணித் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 4 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இப்பெயர்ச்சியால் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். பத்தாவது வீட்டில் புதனின் மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். புத்திசாலித்தனமாக இருப்பீர்கள், அதிகம் தயக்கம் கொள்ளமாட்டீர்கள் மற்றும் பணியிடத்தில் நடக்கும் மீட்டிங்கில் பங்கேற்பீர்கள். முக்கியமாக பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், அற்புதமாக திட்டம் தீட்டி சிறப்பான முறையில் வெற்றி பெறுவீர்கள். இது உங்களுக்கு உயர் பதவி கிடைக்க வழிவகுக்கும். நீங்கள் பேசும் விதம் மற்றும் அமைதியான நடத்தை பணியிடத்தில் உள்ள உங்கள் சகாக்களால் விரும்பப்படும். இது தவிர, இந்த பெயர்ச்சி குடும்ப வாழ்க்கைக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தின் மொத்த வீட்டு வருமானமும் அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். இந்த நேரம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு சற்று தொந்தரவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











