Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
புதன் மீன ராசிக்கு செல்வதால் அடுத்த 14 நாட்கள் கவனமா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார்?
புதன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமாகியுள்ளார். தற்போது அஸ்தமன நிலையில் புதன் உள்ளார். இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி காலை11.05 மணிக்கு கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன், எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து தான் பலன்கள் கிடைக்கும். ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்பி மோசமாக கையாளுவார்கள். பொதுவாக புதன் அதன் இயக்கத்தைப் பொறுத்து ஒரு ராசியில் சுமார் 14-30 நாட்கள் வரை இருக்கும்.

இத்தகைய புதன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமாகியுள்ளார். தற்போது அஸ்தமன நிலையில் புதன் உள்ளார். இந்நிலையில் மார்ச் 24 ஆம் தேதி காலை11.05 மணிக்கு கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இப்போது மீன ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெற போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல லாபகரமானதாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் புத்திசாலித்தனமாக செலவிட அறிவுறுத்தப்படுகிறத. குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமான காலம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தைரியம் மற்றும் பலம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் இக்காலத்தில் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புத்திசாலித்தனமாக பணத்தை எப்போதும் செலவு செய்யுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதையைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் கிடைக்கும். முதலீட்டில் இருந்து லாபத்தைப் பெறுவீர்கள். பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும் தொந்தரவு செய்யும். மன அழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். இக்காலத்தில் வாக்குவாதத்தில் இருந்து விலகி இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் வெற்றியைக் காண்பீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். முதலீடு செய்வதற்கு சிறந்த காலம். கொடுக்கல் வாங்கலில் இருந்து லாபத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களையே பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இது நல்ல காலம். பரிவர்த்தனைகளுக்கு இது நல்ல காலம்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் சாதகமான பலன்களையே பெறுவார்கள். உங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் மன அமைதியை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களையே பெறுவார்கள். வாக்குவாதங்களில் இருந்து சற்று விலகி இருங்கள். வெளியாட்களை நம்பும் முன் கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இக்காலத்தில் பொறுமையைக் கடைபிடியுங்கள். அதோடு எந்த ஒரு புதிய வேலையையும் இக்காலத்தில் தொடங்கிவிடாதீர்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications