Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
புதன் அஸ்தமனத்தால் ஏப்ரல் 8 வரை இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்... உஷார்..
புதன் கும்ப ராசியில் அஸ்தமனமாகி இருக்கும் போது 12 ராசிகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், 4 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
நவகிரகங்களில் புத்திகாரகனான புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 2022 மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சூரியனுக்கு மிக அருகில் சென்று அஸ்தமனமாகியுள்ளார். அஸ்தமனமாகி இருக்கும் புதன் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிப்பார்.

ஜோதிடத்தில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் புதன் நவகிரகங்களில் சிறப்பான நிலையில் இருப்பவர். பொதுவாக கிரகங்கள் அஸ்தமனமாகும் போது அசுப பலன்களையே பெறக்கூடும். ஆகவே புதன் கும்ப ராசியில் அஸ்தமனமாகி இருக்கும் போது 12 ராசிகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், 4 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
புதன் அஸ்தமன காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் சில மாற்றங்களைக் காணலாம். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கை சற்று வேதனையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். இல்லாவிட்டால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! புதன் அஸ்தமனத்தால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சுயமாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள். முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம் அல்ல. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இக்காலத்தில் சற்று மன சஞ்சலத்துடன் இருப்பார்கள். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கல்களுக்கு இக்காலம் சாதகமானது அல்ல. பண இழப்பு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! புதன் அஸ்தமனத்தால் அதிருப்தியான தருணங்களை சந்திப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் நிறைந்திருக்கும். சில சிரமங்களை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பொறுமையாக இருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.



Click it and Unblock the Notifications
