Budh Uday 2023: தனுசு ராசியில் உதயமாகும் புதனால் ஜனவரி 13 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது..

2023 ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு புதன் தனுசு ராசியில் உதயமாகவுள்ளார். புதனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தால், 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படும்.

Mercury Rise In Sagittarius on 13th January 2023: ஜோதிடத்தில் மிகவும் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுபவர் புதன். இந்த புதன் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திகாரகன் என்று அழைக்கப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் புதன் கற்றல் திறன், நினைவாற்றல், பேச்சு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இந்த புதன் 2023 ஜனவரி 02 ஆம் தேதி தனுசு ராசியில் அஸ்தமனமானார்.

Mercury Rise In Sagittarius on 13th January 2023

இந்நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு புதன் தனுசு ராசியில் உதயமாகவுள்ளார். புதனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தால், 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படும். இப்போது 2023 ஜனவரி 13 ஆம் தேதி உதயமாகும் புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இதுவரை உங்கள் தந்தையுடன் இருந்து வந்த சில மோதல்கள் முடிவுக்கு வந்து, அவருடனான உறவு மேம்படும். அரசியலில் இதுவரை சர்ச்சையில் சிக்கியிருந்தவர்கள், இந்த புதன் உதயத்திற்கு பின் சர்ச்சையில் இருந்து விடுபடுவார்கள். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் திடீர் பண இழப்பை சந்திக்க நேரிடும். எந்த ஒரு ஊக வணிகத்திலும் ஈடுபடாதீர்கள். எந்த காரணத்திற்காகவும் உங்கள் சேமிப்பில் கை வைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக உங்கள் உறவினர்களுடன் இதுவரை பிரச்சனைகளை கொண்டிருந்தால், அது இக்காலத்தில் சரியாக வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் திருமணமாகாதவர்கள் தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். ஒருவேளை நீங்கள் யாரையேனும் காதலித்து வந்தால், உங்கள் குடும்பத்தினரிடம் அதை கூறி அனுமதியைப் பெறுவீர்கள். இதுவரை நீங்கள் ஆரோக்கியத்தை புறக்கணித்து வந்திருந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாமல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இதுவரை எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். திடீர் மருத்துவச் செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலம் நல்ல பலனளிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். ஊகம் மற்றும் பங்கு சந்தை மூலம் நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு இந்த புதன் உதயமானது அற்புதமாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை சொத்து, வாகனம் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்திருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் உடன்பிறந்தவர்களுடனான பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலை காரணமாக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் தந்தை மற்றும் வழிகாட்டியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். நிதி பிரச்சனைகள் நீங்கும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பு அதிகரிக்கும். மோசமான உணவுப் பழக்கம் அல்லது தொண்டை பிரச்சனையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் சற்று விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் உங்கள் வாழ்வில் ஒரு நேர்மறையை புதன் கொண்டு வருவார். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள், பேரம் பேசுபவர்கள், வங்கி, மருத்துவத் துறையில் இருப்பவர்கள், இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், கூட்டாளரின் ஆதரவைப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் துணையுடன் அமைதியான மற்றும் அன்பான உறவை அனுபவிப்பார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க தொடங்கும். இதுவரை எதிர்கொண்ட பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும். கர்ப்பமாக இருக்கும் மகர ராசிப் பெண்கள் சற்று விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். தம்பதிகள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவழிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகிறார். இதனால் இக்காலம் தொழில் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் செழிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள். இக்காலத்தில் காதலில் விழ வாய்ப்புள்ளது. வீடு, வாகனம், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்க திட்டமிட்டு, இதுவரை தள்ளிப் போட்டிருந்தால், இக்காலத்தில் அதை வாங்க முயற்சிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, January 11, 2023, 19:27 [IST]
Desktop Bottom Promotion