Just In
- 2 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- 16 hrs ago
Pizza dosa recipe : பிட்சா தோசை
- 16 hrs ago
உங்க முடி நீளமா கருகருனு அடர்த்தியா வளர எலுமிச்சை சாறை இந்த 5 வழிகளில் யூஸ் பண்ணா போதுமாம்!
Don't Miss
- Finance
1160 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 6% உயர்வில் டாக்டர் ரெட்டி..!
- Sports
மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா
- Movies
12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?
- News
பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள் தானே..! ஆதார் கார்ட் கொடுங்க.. அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதன் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பண பிரச்சனையை சந்திக்கப் போறாங்க.. உஷார்...
வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. இந்நிலையில் புத்திகாரகனான புதன் 2022 மே 10 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் மாறி பயணிக்க ஆரம்பித்து, பின் 2022 மே 13 ஆம் தேதி அஸ்தமனமாகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கும் போது அதன் விளைவுகள் சற்று மோசமாக இருக்கும்.
புதன் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் போது, 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் ஏற்ற இறக்கங்களைக் காண வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிலையில் பயணிக்கிறார். இந்த வீடு செலவு மற்றும் நஷ்டத்தின் வீடு. எனவே இந்த புதன் வக்ர பெயர்ச்சி காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இது உங்களின் மாத பட்ஜெட்டை கெடுக்கும். அதே வேளையில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் அப்பணத்தை திரும்ப பெற முடியாமல் போகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் வக்ர பெயர்ச்சி வலி நிறைந்ததாக இருக்கும். இந்த கால கட்டத்தில் வெற்றி பெறுவதற்கு எதிலும கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தால் எதையும் பெற முடியாது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த புதன் வக்ர பெயர்ச்சி காலம் சற்று தீங்கு விளைவிப்பதாக இருக்கும். புதன் 6 ஆவது வீட்டில் வக்ர பெயர்ச்சியாகிறார். இந்த வீடு எதிரி மற்றும் நோய்களின் வீடு. எனவே இக்காலத்தில் உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் மனக்கசப்புகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சில பழைய நோய்கள் மீண்டும் தோன்றி, பாடாய் படுத்தக்கூடும்.