Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
Mercury Combust 2022: கும்ப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் ஏப்ரல் 8 வரை இந்த ராசிகளுக்கு கஷ்ட காலமா இருக்கும்..
ஒருவரது புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இத்தகைய புதன் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் 16.06 மணிக்கு சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார்.

ஒருவரது புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இத்தகைய புதன் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் 16.06 மணிக்கு சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். பின் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிப்பார். பொதுவாக கிரகங்களில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலே, அது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அஸ்தமனமாகும் போது நற்பலன்களை விட கெடுபலன்களையே பெறக்கூடும். இப்போது 2022 மார்ச் 18 ஆம் தேதி புதன் அஸ்தமனமாவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
புதன் அஸ்தமனத்தால் மேஷ ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். மனமானது ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தோள்பட்டை வலியை அனுபவிக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் சில குழப்பங்களுடன் இருப்பீர்கள். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வாகனம் வாங்க நினைத்தால், உங்களின் அந்த விருப்பம் இக்காலத்தில் நிறைவேறும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இக்காலத்தில் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். மத நிகழ்வுகளில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் அஸ்தமன காலம் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவீர்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. சிலர் யாத்திரை கூட செல்லலாம். வணிகர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புதன் அஸ்தமன காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இக்காலம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இக்காலத்தில் செல்வாக்குமிக்க நபரை சந்திப்பீர்கள். நீங்கள் வேலையை மாற்றுவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை இக்கால கட்டத்தில் வலுபெறும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அதோடு இக்காலத்தில் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நற்செய்திகள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் அஸ்தமன காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இக்காலத்தில் உங்கள் மீதான நம்பிக்கை சற்றும் குறையாது. குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். பொருள் வசதிக்காக சற்று அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் மனத்தில் பயம் இருந்து கொண்டே இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும் இடமாற்றத்திற்கும் இக்காலத்தில் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வசதியானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இக்காலகட்டத்தில் நல்ல பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் இக்காலத்தில் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! இக்காலத்தில் வேலை தொடர்பாக இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் தொந்தரவு செய்யும். எனவே இக்காலத்தில் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த புதன் அஸ்தமன காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்காவிட்டால், வீட்டின் நிலை மோசமடையக்கூடும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
