Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்!
உங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கனவு கண்டால் அதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக பிராய்டு கனவுகளின் விளக்கம் பற்றி குறிப்பிடுவது அறிவியல் சார்ந்த ஆய்வு முறையாக இருக்கும். ஆனால் நம்முடைய முன்னோர்களிடம் இருக்கின்ற கனவுகள் சார்ந்த நம்பிக்கைகளும் விளக்கங்களும் வேறு வேறாகவே இருக்கின்றன.

கனவு என்பது மனிதர்கள் மத்தியில் மிகவும் பொதுவான ஒன்று. தூங்கும் போது அனைவருக்கும் வருவது தான் கனவு. ஆனால், சிலருக்கு மட்டும் தான் அடிக்கடி விசித்திரமான கனவுகள் வரும் பேய் கனவுகள், வினோத கனவுகள் மற்றும் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருவதுண்டு. அதாவது ஆழ்நிலை உறக்கத்தில் வரும் கனவுகளுக்கும் ஆழ்நிலையில் இல்லாத தூக்கத்தின் போது வருகின்ற கனவுகளுக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு.

உடலுறவு
உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் தான் மிகவும் மனதை பாதிக்கும். நம்முடன் பணிபுரிவோர், பிரபலங்கள், விரோதி, முன்னால் காதலி, யார் எவர் என்றே தெரியாத நபர் போன்றவர்களோடு எல்லாம் உடலுறவு வைத்துக்கொள்வது போன்ற கனவுகள் சிலருக்கு வரும். அது ஏன் என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்ஸ.

புதிய நபர்கள்
உங்களுக்கு ஊர் பெயர் தெரியாத அந்நியர்களுடன் மற்றும் புதிய நபர்களுடன் நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த, தெரியாத நபரோ உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருவதற்கு முழுவதுமாக நீங்கள் தான் காரணம். மர்மம் மற்றும் காரசாரமான நிகழ்வுகளை விரும்பும் நபர்களுக்கு தான் அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம்.

பல பேருடன்
பொதுவாக சிலருக்கு உடலுறவு வைத்துக் கொள்ளும் முறையில் விருப்பமும் ஈடுபாடும் குறைந்தாலோ அல்லது புதுவிதமாக வேறு வேறு வகையில் வித்தியாசமான பொசிசன்களை முயற்சி செய்து உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் அதிகமாக இருந்தாலோ இதுபோன்று வித்தியாசமாக கனவுகள் அல்லது பலருடன் ஒரே நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரும் என்று மனவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிரபலங்கள்
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான், அவர்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம். இது, மிகவும் இயல்பானது. நீங்கள் ரொமாண்டிக் மூடில் இருக்கும் போது, அவர்களது திரைப்படங்கள் அல்லது அவர்கள் சார்ந்த செய்திகள் படிக்கும் போது, பேசும் போது அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம். ஏனென்றால் ஆண்கள் தங்களுடைய இச்சையை ஏதேனும் மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகிய விஷயங்களில் நீர்த்துப் போகச் செய்துவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் சற்று வித்தியாசமானவர்கள்.

வெறுக்கும் நபர்களுடன்
உங்களுக்கு பிடிக்காத நபர், உங்கள் வேலைகளில் எப்போதும் இடையூறு செய்துக் கொண்டே இருக்கும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வதை போன்ற கனவுகள் வரலாம். இதுப் போன்ற கனவுகள் நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போது தான் வருமாம். என்ன தான் பிடிக்காமல் இருந்தாலும், அவர்களது ஏதேனும் ஓர் குணாதிசயம் உங்களுக்கு பிடித்திருக்கும். அது சார்ந்த விஷயங்களில் குழப்பத்தில் இருக்கும் போது இவ்வாறான கனவுகள் வருவது சகஜம் தானாம்.

முன்னாள் காதல்
முன்னாள் காதலியின் நினைவுகள் அல்லது காதலரின் நினைவுகளால் பாதிப்பது அல்லது அவர்களது செயல்கள் எங்காவது பிரதிபலித்தல், அவர்களோடு பழகும் போது ஏற்பட்ட உறவுகள் சார்ந்த நினைவுகள் போன்றவை உங்களை இடையூறு செய்யும் போது, அவர்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம். அவர்களைப் போலவே யாரையாவது பார்ப்பது, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை நினைவு கூர்வது போன்றவற்றாலும் இதுபோன்ற கனவுகள் வர அதிக வாய்ப்புண்டு.
ஆக மொத்தத்தில் உங்களுக்கு வரும் கனவுகளுக்கு எல்லாம் நீங்கள் தான் முழுப் பொறுப்பு. உங்களுடைய எண்ணங்கள் எதைச் சார்ந்து அதிகம் பயணிக்கின்றதோ அதை சார்ந்து தான் கனவுகளும் வரும். அவை தான் கனவுகளில் பிரதிபலிக்கும்.



Click it and Unblock the Notifications