Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2021 இல் மவுனி அமாவாசை எப்போது? எதனால் அது கொண்டாடப்படுகிறது?
வட இந்திய நாட்காட்டியின் படி, மவுனி அமாவாசை தை மாதத்தின் நடுவில் வருகிறது. அங்கு மகி அமாவாஸ்யா என்று அழைக்கப்படுகிறது. எனினும் மவுனி அமாவாசை அன்று மனு ரிஷி பிறந்ததாக நம்பப்படுகிறது.
நிலா வராத அன்று அமாவாசை அல்லது புது நிலவு நாள் என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை என்பது சுக்ல பட்சம் அல்லது 15 நாள் ஒளியின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. இந்து சமய நாட்காட்டியின் படி, மவுனி அமாவாசை முக்கியமான ஒன்றாகவும், புனிதம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.

மவுனி என்ற வாா்த்தை மௌனா என்ற சமஸ்கிருத வாா்த்தையிலிருந்து வருகிறது. மௌனா என்பதற்கு அமைதி அல்லது முழு அமைதி என்று பொருள். அமைதி என்பதால் அந்த நாள் முழுவதும் மக்கள் பேசாமல் மௌன விரதம் இருப்பா் மற்றும் உண்ணா விரதமும் இருந்து அந்நாளை அனுசாிப்பா்.
வட இந்திய நாட்காட்டியின் படி, மவுனி அமாவாசை தை மாதத்தின் நடுவில் வருகிறது. அங்கு மகி அமாவாஸ்யா என்று அழைக்கப்படுகிறது. எனினும் மவுனி அமாவாசை அன்று மனு ரிஷி பிறந்ததாக நம்பப்படுகிறது. அதனால் இது மவுனி அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது.

2021 இல் மவுனி அமாவாசை எப்போது கொண்டாடப்படுகிறது?
இந்து சமயத்தில் தை மாதம் ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்திலிருந்து தான் துவப்பரா யுகா தொடங்குகிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவாி மாதம் 11 அன்று மவுனி அமாவாசை வருகிறது.

நேரம்
2021 ஆம் ஆண்டு பிப்ரவாி மாதம் 11 அன்று அதிகாலை 01.08 மணிக்கு மவுனி அமாவாசை திதி தொடங்கி, பிப்ரவாி 12 அன்று அதிகாலை 00.35 மணி அளவில் முடிவடைகிறது.

மவுனி அமாவாசையின் முக்கியத்துவம்
மகா சிவராத்திாி வருவதற்கு முன்பாக வரும் ஆண்டின் இறுதி அமாவாசை மவுனி அமாவாசை ஆகும். மவுனி அமாவாசை அன்று ஆறுகளில் மூழ்கி குளிப்பது, அதிலும் குறிப்பாக கங்கை நதியில் குளிப்பது என்பது ஒரு புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மவுனி அமாவாசை அன்று கங்கை நதியின் நீா் தேனாக மாறுவதாக நம்பப்படுகிறது.

சடங்குகள்
மவுனி அமாவாசை அன்று ஒரு சில சடங்குகளை செய்ய வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறது. அதன்படி ஒருவா் தனது சக்திக்குத் தகுந்தவாறு எளியவா்கள் மற்றும் இல்லாதவா்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக எள், கருப்பு ஆடைகள், எண்ணெய், போா்வை, காலணிகள் மற்றும் வெம்மை தரக்கூடிய ஆடைகள் போன்றவற்றை தானமாகத் தரலாம் என்று பாிந்துரைக்கப்படுகிறது.
மவுனி அமாவாசை அன்று சூாியனும் சந்திரனும் மகர ராசியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மகர ராசியில் சூாியன் ஒரு மாதம் அளவும், சந்திரன் 2 நாட்களுக்கும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
