Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
செவ்வாய் பெயர்ச்சியால் மே 10 வரை இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
மிதுனம் செல்லும் செவ்வாயின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
வேத ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.

இந்த செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்த மிதுன ராசியில் செவ்வாய் 2023 மே 10 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்வார். மிதுனம் செல்லும் செவ்வாயின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இக்காலத்தில் தேவையில்லாமல் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பட்ஜெட் பாழாகி, அதன் விளைவாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். இக்காலகட்டத்தில் உங்கள் மாமியார் மாமனாரிடம் இருந்து சற்று விலகி இருங்கள். இல்லாவிட்டால், உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுவிடும்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். இக்கால கட்டத்தில் சண்டைகள் அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் கூட்டு வணிகத்தைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் புதிய வேலைகளைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
