Just In
- 37 min ago
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 4 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 7 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மிதுனம் செல்லும் செவ்வாயால் அக்டோபர் 16 முதல் இந்த 6 ராசிகளுக்கு யோகம் அடிக்கப் போகுது...
பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதில் சில கிரகங்களின் ராசி மாற்றம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அவர் அக்டோபர் 16 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறார். செவ்வாய் மோசமான பலன்களை வழங்கக்கூடிய கிரகமாக கருதப்படுவதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி கெடு பலன்களை அதிகம் தரும் என்று நினைக்கலாம்.
ஆனால் செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். இப்போது அக்டோபர் 16 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைப் காண்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். செவ்வாய் மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்த சவாலையும் சமாளித்து வாழ்வில் முன்னேறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், அது விரைவில் சரியாகிவிடும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முக்கியமான பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் இக்காலத்தில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்காமல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் நல்ல வருமானத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிதி மேம்படும். எந்த துறையில் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் வேலை செய்யும் பாணியும் மேம்படும். இதனால் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, ஊக வணிகம் மற்றும் லாட்டரிகளில் முதலீடு செய்து நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக இருக்கும். வியாபாரத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பல வழிகளில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் அனைத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அதே வேளையில் தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வாழ்வின் பல இடங்களில் மாற்றம் ஏற்படும். எந்த வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எந்த திட்டத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள். சந்தோஷத்தை அதிகரிக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்த காலமாக இருக்கும். இக்காலகட்டத்தில் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)